ஊட்டி,கொடைக்கானலுக்கு பைக்கில் சுற்றுலா போக ஆசைப்படுறீங்களா.. அப்ப இந்த விஷயத்தை உடனே பாருங்க !
ஊட்டி: ஊட்டி,கொடைக்கானல், மேகமலை, கோத்தகிரி, முதுமலை போன்ற வனப்பகுதிக்கு இருசக்கர வாகனங்களில் சுற்றுலா செல்வோர் கண்டிப்பாக கவனமாக செல்ல வேண்டும். மொத்தமாக இருசக்கர வாகனத்தில் போகும் போது யானைகள் திடீரென வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே கவனமாக செல்ல வேண்டும்.
தமிழகத்தில் தற்போது புதிய கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. அது என்னவென்றால் வார இறுதிகளில் சுற்றுலா செல்வது தான்.. அதுவும் எப்படி என்றால், பலரும் இருசக்கர வாகனங்ளில் சுற்றுலா செல்வது தான். அதிநவீன இருசக்கர வாகனங்கள் பலரும் வைத்திருக்கிறார்கள். இதன் காரணமாக லடாக்கிற்கே சுற்றுலா செல்வது அதிகமாக உள்ளது. இன்னொரு பக்கம் வார இறுதிகளில் சென்னையில் இருந்து ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, வாகமன், மேகமலை, ஏற்காடு, ஏலகிரி, குடகு, வயநாடு, வால்பாறை என விருப்பமான மலைவாசல் தளங்களுக்கு செல்கிறார்கள்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிகம் பேர் ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, முதுமலை, கோத்தகிரி போன்ற பகுதிகளுக்கு செல்கிறார்கள். பெரும்பாலும் நண்பர்கள் தான் குழுவாக மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கிறார்கள். கார்களில் செல்வதை விட இருசக்கர வாகனத்தில் சுற்றுலா செல்லும் போது, மலை பிரதேசத்தில் நான்கு சக்கர வாகனங்களால் செல்ல முடியாத பல அற்புதமான இடங்களுக்கு போக முடியும். இன்னொரு விஷயம் இயற்கையை ரசித்தபடி, பிடித்த இடத்தில் நிறுத்திவிட்டு ஜாலியாக இருக்க முடியும். மழை பெய்யவில்லை என்றால், இருசக்கர வாகனப்பயணம் போல் இனிமையானது எதுவுமே இல்லை.
பொதுவாக நம்ம ஊர் மலைகளை பொறுத்தவரை வனவிலங்குகள் அதிகமாகவே உள்ளது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை யானை, புலி, சிறுத்தை , காட்டுமாடு போன்ற விலங்குகளை அதிகமாக பார்க்க முடியும். குறிப்பாக யானைகள் சர்வ சாதாரணமாக வலம் வரும். எனவே இருசக்கர வாகனத்தில் செல்வோர் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். அண்மையில் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா சென்ற இளைஞர்களின் குழுவை ஒற்றை காட்டுயானை மறித்துள்ளது. டீமில் உள்ள எல்லாருமே முன்னால் போய்விட்ட நிலையில் ஒரு வாகனம் மட்டும் யானையிடம் மாட்டியது. நல்ல வேளையாக எதுவும் செய்யவில்லை.யானையை பார்த்தவர்கள் மிக கவனமாக சாலையில் வாகனத்தை இயக்கி அனைவரும் தப்பி விட்டனர். இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
மலை பாதை வழியாகவும்,வனப் பகுதி வழியாகவும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்லவும்.இடம் :- கெத்தை @gurusamymathi @kovaikarthee @vijay_vast @PrasanthV_93 @ASubburajTOI @Senthil_TNIE #nilgiris#forest #elephant pic.twitter.com/2Fbz8IluG5
— Srini Subramaniyam (@Srinietv2) November 29, 2023
ஊட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சுற்றுலா செல்வோர், காலை மற்றும் மதிய வேளைகளில் மேலே ஏறி சென்றுவிடுவது நல்லது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் மலைகளில் பயணிக்க வேண்டாம். அதேபோல் மலையை விட்டு கீழே இறங்கும் போதும் மாலைக்குள் இறங்கிவிடுங்கள். அதேநேரம் முதுமலை, கூடலூர், கோத்தகிரி போன்ற பகுதிகளுக்கு இருசக்கர வாகனத்தில் செல்வோர் கண்டிப்பாக மலை நேரம் கடந்துவிட்டால் கண்டிப்பாக பயணத்தை தள்ளிப்போடுவது நல்லது.
கொடைக்கானலை பொறுத்தவரை காட்டுமாடுகள் மட்டுமே பெரிய இடையூராக இருக்கும். அதுவும் பகலில் இருக்காது. இரவில் தான் ஓரளவு இருக்கும். அதேநேரம் கொடைக்கானலில் இருந்து அடுக்கம் சாலையில் தேனிக்கு இரவு அல்லது மாலை வேளையில் எந்த காரணம் கொண்டும் பயணிக்க கூடாது. அந்த சாலை ஆபத்தானது. அதேபோல் பழனி சாலையிலும் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் இறங்கக்கூடாது.. ஒருவேளை இரவில் கீழே இறங்க வேண்டும் என்றால் வத்தலக்குண்டு சாலையை பயன்படுத்துவதே சிறப்பானதாக இருக்கும். அதுவும் கூட நள்ளிரவு நேரத்தில் உகந்தது அல்ல.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications