கோடை வெயிலுக்கு ஜில் ஆக குளியல் போடலாம்.. சுற்றுலாப் பயணிகளுக்கு ஒகே சொன்ன வனத்துறை.. ஸ்பாட் இதுதான்
நெல்லை: கோடை வெயிலுக்கு சுற்றுலா செல்ல நினைக்கும் பயணிகளுக்கு சூப்பர் தேர்வாக நெல்லை மாவட்டதில் உள்ள மணிமுத்தாறு அருவி உள்ளது. கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்து வந்த நிலையில் மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எந்த ஆண்டும் இல்லாத வகையில் நடப்பு ஆண்டில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் வெளியில் செல்வதற்கே மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். பெரும்பாலானா மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. சேலம், ஈரோட்டில் 107 டிகிரி வரை வெப்பம் பதிவாகியது.

இது போல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள்தால் குழந்தைகள் விளையாடுவதற்கும், வெளியே சுற்றுலா அழைத்து செல்லவும் பெற்றோர் விரும்புகின்றனர். இதனால் மலைவாசஸ்தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியிலும் இன்று முதல் குளிப்பதற்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
கடந்த 4 மாதங்களாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததால், சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது கோடை வெயில் வெளுத்து வருவதாலும், சீரமைப்பு பணிகள் முடிந்துல்லதாலும் சுற்றுலா பயணிகளுக்காக இன்று முதல் குளிப்பதற்கு அனுமதி அளித்துள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா அருகே மேற்கொ தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ளது மணிமுத்தாறு அருவி. ஆண்டு முழுவதும் இங்கு தண்ணீர் விழுந்துகொண்டே இருக்கும். எவ்வளவு வெயில் அடித்தாலும் தண்ணீர் விழுந்துகொண்டு இருப்பதால் சுற்றுலா பயணிகளும் கோடை காலத்தில் தவறாமல் இங்கு வந்து குளித்து மகிழ்வார்கள்.
ஆனால், கடந்த ஆண்டும் டிசம்பர் மாதத்தில் தென் தமிழத்தில் குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, குமரி , தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்த பெருமழை இந்த மணிமுத்தாறு அருவியில் இருந்த தடுப்பு கம்பிகள், பிளாட்பார்ம்கள், சுற்றுலா பயணிகள் நின்று செல்லும் இடம் என அனைத்தும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த மழை மணிமுத்தாறு அருவியிலும் சுற்றுலா பயணிகளை குளிக்க விடாதபடி செய்துவிட்டது. இந்த நிலையில் தான் கடந்த 4 மாதமாக அங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு தடுப்பு கம்பிகள் அமைப்பது, பெண்கள் ஆண்கள் தனித்தனியாக வருவதற்கு வசதி, பிளாட்பார்ம்கள் அமைக்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு இந்த அருவி திறக்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் வழக்கம் போல் மணிமுத்தாறு அருவியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை வனவிதிகளுக்கு உட்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications