இந்தியாவில் இவ்ளோ சுத்தமான இடமா? நான் என்னமோ நினைச்சேன், ஆனால்! மெய்சிலிர்த்த ஜெர்மன் சுற்றுலாவாசி
சென்னை: இந்தியாவிற்கு சுற்றுலா வந்த ஜெர்மன் நாட்டு இன்ஸ்டா பிரபலம் ஒருவர், இங்குள்ள கோவா கடற்கரையை பார்த்து மெய்சிலிர்த்து தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இப்படி ஒரு சுத்தமான இடத்தை நான் பார்த்ததே இல்லை எனவும் ஐரோப்பிய நாடு மாதிரி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியாவிற்கு சுற்றுலா வரும் பயணிகள், மக்கள் காட்டும் அன்பு, அக்கறை, உபசரிப்பு என இங்குள்ள விருந்தோம்பலை கண்டு மெய்சிலிர்ப்பதை பார்க்க முடியும். அதுமட்டுமின்றி, இங்குள்ள கட்டமைப்புகள் ஐரோப்பிய நாடுகளுக்கு நிகராக தரம் உயர்ந்து வருவதாகவும், வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பதிவிடும் வீடியோக்களை சமீப காலமாக அதிகமாக பார்க்க முடிகிறது.

இணையத்தில் பரவும் வீடியோ
அந்த வகையில் தற்போது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர், "ஐரோப்பிய நாடுகளிலும் கூட நான் இதுபோன்ற இடத்தை பார்த்தது இல்லை" என இந்தியாவில் இருந்தபடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் அலெக்ஸ் வெல்டர். டிராவல் விலாகராக (Travel Vlogger) இருக்கும் இவர் பல்வேறு நாடுகளுக்கும் சென்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவர் தனது வீடியோவில், "இந்தியாவில் நான் பார்த்ததிலேயே இதுதான் தூய்மையான இடம். கோவா சூப்பர் பார்ட்டி ஹாட்ஸ்பாட்டாக இருக்கும், நிறைய சுற்றுலாப் பயணிகள் மற்றும் நிறைய குப்பைகள் இருக்கும் என்று நான் எப்போதும் நினைத்தேன்.
ஒரு குப்பை கூட இல்லை
ஆனால், நாங்கள் தெற்கு கடற்கரையில் நடந்து வந்தோம். ஒரு சிறு குப்பையையும் இங்கே பார்க்க முடியவில்லை. இந்த இடம் குறித்து முன்கூட்டியே நான் நினைத்து வைத்ததை விட முற்றிலும் மாறுபட்டதாக அது இருந்தது.
இங்கு நாங்கள் பார்த்தது மூன்று உள்ளூர் நபர்களை மட்டும்தான். அவர்கள் வானத்தைப் பார்த்துக்கொண்டே சிரித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள் என்று நினைக்கிறேன்.. நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்குப் புரியும்," என்று தெரிவித்தார்.
ஐரோப்பிய நாட்டில் இருப்பது போல உணர்கிறேன்
இந்த இடத்தின் அழகில் மயங்கிய வெல்டர், ஐரோப்பாவுடன் ஒப்பிட்டுப் பேசினார். "இந்த இடம் வெப்பமண்டலப் பகுதிபோல இல்லை. இங்குள்ள மரங்களைப் பாருங்கள்.. நான் ஏதோ ஒரு ஐரோப்பிய நாட்டில் இருப்பது போல உணர்கிறேன். ஆங்காங்கே குப்பை தொட்டிகள் உள்ளன. இதுபோல் சுத்தமான இடத்தைக் கண்டுபிடிப்பது அரிது, இதை நீங்கள் பாராட்டுவீர்கள்," என்றார்.
ஜெர்மன் இன்ஸ்டா பிரபலத்தின் இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது. இந்திய நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை பாராட்டி பதிவிட்டதை பார்க்க முடிகிறது. நெட்டிசன்களில் பெரும்பாலானவர்கள் தெற்கு கோவாவின் அழகை வியந்து பாராட்டியுள்ளனர். சிலர், தெற்கு கோவாவை அதிக சுற்றுலாப் பயணிகள் வருகையிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளனர்.
நெட்டிசன்கள் கருத்து
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "கோவாவின் அழகான பகுதி தெற்கில்தான் உள்ளது. வடக்கில் நடக்கும் அழிவுகள் இங்கு இன்னும் நடைபெறவில்லை. அது அப்படியே இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்," என்று கூறினார். இன்னொரு நெட்டிசன் கூறுகையில், "தெற்கு கோவா உண்மையில் மிகவும் அழகானது. இங்குள்ள ஒரு உள்ளூர்வாசியாக, ஒவ்வொரு நாளும் கடற்கரையில் கழிக்கிறோம்," என்றார்.
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "தயவுசெய்து இதைச் செய்ய வேண்டாம் நண்பரே. நல்ல நோக்கத்திற்காக நீங்கள் பதிவிட்டாலும், இது உண்மையில் அந்த இடத்தை அழிப்பதற்கான காரணமாக அமைந்துவிடும். தவறாக நினைக்க வேண்டாம்," என்று கருத்து தெரிவித்தார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications