Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டின் “மூக்கை” தொடலாமா? மலையாளிகள் கூட்டம் கூட்டமாக வரும் இடம்! திரும்பினாலே டூரிஸ்ட் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் மிக முக்கியமான சுற்றுலா தலமாகவும் ஆன்மீக தலமாகவும் இருக்கும் நாகூருக்கு எப்படி செல்வது? அங்கு என்னவெல்லாம் ஸ்பெஷல்? என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு இப்பதிவு பதிலளிக்கும்.

தமிழ்நாட்டின் மூக்கு என்றால் உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் உடனே கூகுளில் தமிழ்நாடு மேப்பை தேடி பாருங்கள். அதில் வலதுபக்க ஓரத்தில் நடுவில் கூர்மையான ஒரு பகுதி இருக்கும். அதுதான், நாகை மாவட்டம். ஆம், நாகை மாவட்டம் அமைந்து உள்ள பகுதியை மேப்பில் பார்த்தால் மூக்கு போன்ற ஒரு உருவம் கிடைக்கும்.

How to go to Nagore tour and what are the key destinations in Nagore?

பலரும் தமிழ்நாட்டின் ஓவியத்தை முகம் போன்ற வரைந்து இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அதில் நாகையைதான் மூக்காக வரைந்து இருப்பார்கள். ஒரு பக்கம் விவசாயமும், மறுபக்கம் கடல் வளமும் கொண்ட அழகிய மாவட்டம் நாகப்பட்டினம். பாக்ல் ஜலசந்தியை ஒட்டி அமைந்து இருக்கும் இந்த நாகை மாவட்டத்தில் விரல் விட்டு எண்ணிவிட முடியாத அளவுக்கு சுற்றுலா தளங்களும், ஆன்மீக தளங்களும் உள்ளன.

கடலின் அலைகள் ஆங்காரமாக முத்தமிட்டு செல்லும் கடற்கரைகளும், பச்சை போர்வை போர்த்தியதை போன்ற வயல்வெளிகளும் நிறைந்த மனதை நிறைக்கும் வளங்களை, அழகிய இடங்களை கொண்ட நாகப்பட்டினத்துக்கு ஏராளமான வெளிமாநில சுற்றுலா பயணிகளும் வருகை தருகிறார்கள்.

இங்குள்ள மும்மத வழிபாட்டுத் தலங்களும் பல மாநிலங்களை சேர்ந்த பயணிகள் வருகிறார்கள். நாகூரில் உள்ள தர்கா நூற்றாண்டு பழமைவாய்ந்த ஒன்றாகும். நாமெல்லாம் கடவுளின் தேசம் என்று தேடிச் செல்லும் கேரளாவில் இருந்தே தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் நாகூர் தர்காவுக்கு வந்து செல்கிறார்கள்.

நாகூர் தர்கா மினராக்களில் உள்ள புறாக்கள், தர்காவை சுற்றிலும் அமைந்து இருக்கும் மார்க்கெட், ஸ்வீட் கடைகள் ஒரு வித்தியாசமான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும். குறிப்பாக இங்கு கிடைக்கும் சில இனிப்பு வகை வேறு எங்குமே கிடைக்காது. குறிப்பாக தொதல், முட்டாசு, இனிப்பு சேவு போன்றவற்றுக்காக நீங்கள் மீண்டும் ஒருமுறை நாகூருக்கு சென்று வரலாம்.

நாகூர் தர்காவுக்கு மட்டும் செல்லாமல் அந்த ஊரின் வீதிகளில் வலம் வந்தாலே உங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். காரணம், மிகவும் பழமையான ஓட்டு வீடுகள், திண்ணை வைத்த வீடுகள், இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகள் என புதிய அனுபவத்தை அப்பகுதி தரும். நாகூர் என்றாலே கடலை விட முடியுமா?

தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக நாகூர் கடற்கரை உள்ளது. கடலில் அனுமதிக்கப்பட்ட தொலைவு வரை இறங்கி நீங்கள் மகிழ்ச்சியாக விளையாடலாம். அங்கு விற்கப்படும் இறால் வாடாவை சாப்பிட்டு மகிழலாம். நிச்சயமாக நாகூர் பயணம் ஒரு மனதுக்கு இதமான அனுபவத்தை உங்களுக்கு வழங்கும்.

அடுத்தடுத்த மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் குறையும் வாய்ப்பு இருப்பதாக் நாகூர் பயணத்துக்கு திட்டமிடுங்கள். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நாகூர் செல்ல சிறந்த காலம் என தமிழ்நாடு சுற்றுலா துறை சொல்கிறது. நாகூரிலேயே புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள் உள்ளன. திருச்சி விமான நிலையத்தில் இருந்து 146 கிமீ தொலைவில் நாகூர் உள்ளது. வடமாவட்ட மக்களும் சரி, தென் மாவட்ட மக்களும் சரி, எளிதில் வந்து செல்லும் அளவுக்கு கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி மத்திய பகுதியில் நாகூர் அமைந்து உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+