தமிழ்நாட்டின் “வாய்குள்” போலாமா.. எட்டிப்பார்த்தாலே இலங்கை தெரியுமாமே! பிரம்மிக்க வைக்கும் ஸ்பாட்
சென்னை: தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலமாகவும், வரலாற்று சிறப்புமிக்க இடமாக திகழும் ராமேஸ்வரத்துக்கு எப்படி செல்வது? அங்கு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க என்னவெல்லாம் உள்ளது என்பதை விரிவாக பார்ப்போம்.
தமிழ்நாட்டின் வரைபடம் நம்மில் பெரும்பாலானோருக்கு நினைவில் இருக்கும். அந்த வரைபடம் ஒரு பக்கம் திரும்பிய மனித முகத்தின் தோற்றம்போல் இருக்கும். அதுபோல் சித்தரித்து பல ஓவியங்களும் உலாவிக்கொண்டு இருக்கின்றன. இப்படிதான் தமிழ்நாட்டின் மூக்கு பகுதியாக பார்க்கப்படும் நாகப்பட்டினம் குறித்து சில வாரங்களுக்கு முன் ஒரு சுற்றுலா பதிவை நாம் வெளியிட்டோம்.

சரி மூக்கு பற்றி சொல்லிட்டீங்க.. வாய் எது? என்ற கேள்விகளும் எழுந்தன. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மூக்கு போன்ற வடிவத்திலேயே நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் போன்றவை வந்துவிடுகின்றன. அதற்கு அடுத்து புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் உள்ளன. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடல் எல்லையான ராமேஸ்வரம்தான் வாய்போன்ற தோற்றத்தை தருகிறது.
வெறும் வரைபடம் மட்டுமின்றி, ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பல அம்சங்கள் உள்ளன. ராமேஸ்வரத்தில் உள்ள கோயிலுக்கே பல மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். கோயிலுக்கு வந்து வழிபட்டுவிட்டு அடுத்த சில நாட்கள் இங்கு தங்கி இருந்து சுற்றுலா தலங்களை ரசித்துவிட்டு செல்கின்றனர்.
பாம்பன் பாலம்: ராமேஸ்வரம் என்றாலே நம் அனைவரது நினைவுக்கு வருவது நீல கடலுக்கு நடுவே நீளமாக செல்லும் பாம்பன் பாலம்தான். இதன் உண்மையான பெயர் அன்னை இந்திரா காந்தி சாலை பாலம், பாம்பன் என்ற ஊரில் இது இருப்பதால் இப்பெயர் வந்துவிட்டது. ராமேஸ்வரம் என்ற தீவை இந்தியாவின் நிலப்பகுதியுடன் இணைக்கும் பிரமாண்ட இந்த பாலம்தான் தென் இந்தியாவின் மிக நீளமான கடல் வழிப்பாலமாகும். இதில் செல்வதும், சாலையோரம் வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கி பார்ப்பதும் நடுக்கடலுக்குள் நிற்கும் உணர்வை தரும். நீங்கள் நேரம் கிடைக்கும்போது அவ்வழியே ரயில் பாலத்தில் ரயிலில் சென்றால் உங்கள் கண்களுக்கு கூடுதல் ட்ரீட்டாக அமையும்.

அரியமான் கடற்கரை: ராமேஸ்வரத்துக்கு வரும் வெளி மாநில, வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் தவறவிடும் சுற்றுலா தலம் அரியமான் கடற்கரை. சவுக்கு தோப்புகள் சூழ, அதை தாண்டி சென்றால் சுவர்க்கம்போல் வெள்ளை நிற மணலில் எழில்மிகு காட்சியை தருகிறது அரியமான் கடற்கரை. ராமேஸ்வரத்தில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கடற்கரை சுற்று வட்டார பகுதி மக்களின் விருப்பமான சுற்றுலா தலமாக உள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கட்டணம் செலுத்தி இதில் படகுசவாரி செல்லலாம். கடலில் குடும்பத்தோடு குளித்தும் மகிழலாம்.

தனுஷ்கோடி: 1964 ஆம் ஆண்டு இலங்கையையும், தமிழ்நாட்டையும் தாக்கிய அதிதீவிர புயலில் அழித்துபோன அழகிய கிராமம் தனுஷ்கோடி. 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்துவந்த இந்த மீனவ கிராமம் அழிந்துபோன சுவடுகள், சிதிலமடைந்த கட்டிடங்கள் இன்னும் அங்கே காணக்கிடைக்கின்றன. இங்கிருந்து எட்டிப்பார்த்தால் இலங்கையின் கடலோர எல்லைப்பகுதி தெரியும் அளவுக்கு இந்தியாவின் ஆதி எல்லையில் அமைந்து உள்ள தனுஷ்கோடி, மறக்க முடியாத பல நினைவுகளை சுமக்க வைக்கும் தலமாக இருக்கும்.
மதுரை விமான நிலையத்திற்கு ராமேஸ்வரத்துக்கு 149 கிமீ தொலைவாகும். சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு ராமேஸ்வரத்துக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சாலை மார்க்கமாக திருச்சியில் இருந்து 271 கிமீ, தஞ்சையிலிருந்து 231 கிமீ, மதுரையிலிருந்து 169 கிமீ, சென்னையில் இருந்து 650 கிமீ தொலைவில் உள்ளது ராமேஸ்வரம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications