சின்ன மொபைல் ஆப் தான்.. கோடிகளை குவிக்கும் கம்பெனிகள்.. சுற்றுலா தொழில் தொடங்குவது எப்படி?
சென்னை: சின்ன மொபைல் ஆப் மூலம் ஆரம்பித்த சுற்றுலா நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக கோடிகளில் பிசினஸ் செய்கின்றன. சுற்றுலா தொழில் என்பது இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு தரும் மிகப்பெரிய தொழில் ஆகும். தமிழகத்தில் சுற்றுலா தொடங்குவது எப்படி என்பதை பார்ப்போம்.
இந்தியாவில் சுற்றுலா துறை மூலம் ஏராளமான மக்கள் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். சுற்றுலா தொழில் என்பது வெறும் சுற்றி பார்க்க வருவோருக்கு வழிகாட்டுவதால் வருமானம் என்பதை தாண்டி, அந்த பகுதி மக்களின் வணிகமும் மேம்படுகிறது. உதாரணமாக சொல்வது என்றால் ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, ராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற சுற்றுலா நகரங்களில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், கடைகள்.. சென்னை மாநகரம் சுற்றுலாவிற்கு என்று மட்டுமே உள்ள நகரம் அல்ல.. ஆனால் சென்னைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். மதுரை, கோவை, திருச்சி என தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்நாட்டு சுற்றுலா பயணிகள், குறிப்பாக சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் வேலை செய்வோர் போன்றவர்கள் மலைவாசல் தலங்கள் மற்றும் கடற்கரைகள் மற்றும் வித்தியாசமான கிராமத்து சுற்றுலாக்களை விரும்புகிறார்கள். அவர்கள் விரும்பும் பேக்கேஜ் மற்றும் வசதிகள் இருந்தால் பலர் ஆர்வமுடன் சுற்றுலா செல்கிறார்கள்.
பலருக்கும் தெரியாத அற்புதமான இடங்கள், நன்கு இணையதள வசதி, உயர்தரமான உணவு, உயர்தரமான தங்கும் விடுதிகள், இனியமையான அணுகுமுறை போன்றவற்றில் தொடர்புகளை ஏற்படுத்த முடியும் என்று நம்புவோர் தாராளமான சுற்றுலா தொழிலை தமிழகத்தில் ஆரம்பிக்கலாம். தமிழகத்தில் சுற்றுலா தொழில் வரும் காலத்தில் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பலரும் மனஅழுத்தம், சலிப்பான வாழ்க்கை முறையை வெறுத்து சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். முன்பெல்லாம் மாதம் அல்லது 2 மாதம் அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறை சுற்றுலாவிற்கு திட்டமிட்ட மக்கள் வாரம் வாரம் சுற்றுலா செல்ல திட்டமிடும் அளவிற்கு மாறி உள்ளார்கள். எனவே சுற்றுலா தொழில் தொடங்க தற்போது சிறப்பான காலமாக கருதப்படுகிறது.
சுற்றுலா தொழில்முனைவோர் அல்லது பயண வணிக நிறுவனங்கள் நடத்த விரும்புவோர் தங்கள் வாடிக்கையாளர்கள் யார் மற்றும் அவர்கள் எந்த இடங்களுக்குப் பயணிக்க விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும். தங்கும் விடுதிகள் எங்கு எவ்வளவு இருக்கின்றன, எங்கு என்ன மாதிரியான வசதிகள் தர முடியும் என்பதை அறிந்திருக்க வேண்டும். பயண வணிக நிறுவனம் நடத்துவோர் பேமிலி டூர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா போன்றவற்றை ஏற்படுத்தி தரலாம். ஆனால் இப்படி சுற்றுலா நிறுவனம் நடத்த கண்டிப்பாக தமிழக அரசிடம அனுமதி வாங்க வேண்டும். இதேபோல் சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் உள்ளூர் வணிகர்களை ஒருங்கிணைக்க வேண்டும் .
அதாவது சரியான முறையில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அவுட்சோர்ஸ் செய்ய வேண்டும். ஆன்லைன் புக்கிங், ஆப்லைன் புக்கிங் என எல்லா வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும். கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும். சுற்றுலா நிறுவனங்கள் கண்டிப்பாக தங்கள் வாடிக்கையாளர்களிடம் ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டும். அது கட்டாயம் ஆகும். எந்த வகையான சுற்றுலா பயணங்களுக்கும் ஜிஎஸ்டி வசூலிக்க வேண்டும். எனவேதான் சுற்றுலா தொழிலை பதிவு செய்ய வேண்டியதை அரசு கட்டாயமாக்கி உள்ளது.
ஒற்றை ஆப் தான், ஓயோ இந்தியா முழுவதும் ஓட்டல்களை புக்கிங் செய்ய முடிகிறது. இதேபோல் மேக் மை டிரிப், ஐஆர்சிடிசி உள்பட ஏராளமான சுற்றுலா மற்றும் பயண நிறுவனங்கள் ஆப் மூலம் வாடிக்கையாளர்களை ஒருங்கிணைத்து சேவை அளிக்கின்றன. வரும் காலத்தில் சுற்றுலா பெரிய தொழிலாக உருவெடுக்கும் வாய்ப்பு உள்ளது.
சுற்றுலா சார்ந்த தொழில் முனைவோர்களான படுக்கை மற்றும் காலை உணவு வழங்குபவர்கள், தங்கும் விடுதிகள், வீடுகளை வழங்குபவர்கள், சாகச சுற்றுலாக்களை நடத்தி வருபவர்கள், கேரவன் சுற்றுலா மற்றும் கேரவன் பூங்காக்களை நடத்தி வருபவர்கள் உள்ளிட்டோர் www.tntourismtors.com என்ற சுற்றுலாத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்தால் நிறைய நன்மைகள் கிடைக்கும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications