கேரளா எல்லையில் மறைந்திருக்கும் இயற்கை விரும்பிகளின் சொர்க்கம்.. தேனி போனா மிஸ் பண்ணிடாதீங்க
தேனி : தமிழ்நாட்டில் கேரள எல்லையை ஒட்டி உள்ள தேனி மாவட்டத்தில் உள்ள கொழுக்குமலை சுற்றுலா தலத்திற்கு கேரளா வழியாகவே போக முடியும்.. இப்போது போனால் ரம்மியான அதன் சூரிய உதயம் மற்றும் காலநிலையை கண்டு மெய்சிலிர்க்கலாம்.
கேரளாவின் இடுக்கி மாவட்டம் சூரியநல்லி அருகே கொழுக்குமலை என்ற அழகிய கிராமம் மிகப்பெரியமலை சிகரங்களுடன் குளுகுளு கால நிலையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு கேரளா வழியாக மட்டுமே வாகனங்களில் உங்களால் போக முடியும் . ஆனால் இது தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகாவுக்கு உட்பட்டது.

போடிமெட்டிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சூர்யநெல்லிக்கு உங்கள் சொந்த வாகனங்களில் போக முடியும். ஆனால் காரை அங்கு நிறுத்திவிட்டு, அங்குள்ள ஜீப்பில் பயணித்து மட்டுமே உங்களால் கொழுக்குமலையை அடைய முடியும்.
இயற்கை அன்னை அத்தனை அழகையும் மறைத்து ஒளித்து வைத்திருக்கும் இடம் என்று சொன்னால் அது கொழுக்குமலைதான்,. வானமே வசீகரித்து சூரியனை நீல ஒளி வீச வைக்கும் இடம்.. பச்சை பசேலென தேயிலை தோட்டங்கள் பனி மூட்டத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் கொழுக்குமலை தான் ஆசியாவின் மிக உயரமான தேயிலை தோட்டம் அமைந்துள்ள பகுதியாகும். மூணாறுக்கு யார் வந்தாலும் கண்டிப்பாக வரக்கூடிய பகுதி தான் கொழுக்குமலை. கொழுக்குமலைக்கு மாலைக்குள் போய் இரவில் தங்க வேண்டும். காரணம் இருக்கிறது.

இங்கு சூரிய உதயத்தை இங்கு காண கோடி கண்கள் வேண்டும் என்பார்கள் சுற்றுலா பயணிகள். கொழுக்குமலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 7130 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மூணாறிலிருந்து சுமார் 32 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கொழுக்குமலை இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற டிரக்கிங் தலம் ஆகும். கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவார்கள் . ஆனால் கொழுக்குமலையில் ஒரே ஒரு தங்கும் விடுதி தான் உள்ளது. இந்த இடத்தில் புக்கிங் செய்தவர்கள் தான் தங்க முடியும்.

Magical sunrise at kolukkumalai. pic.twitter.com/xh9miqpeVt
— மேகமலைக்காதலன் ( A true lover of Megamalai ) (@MegamalaiS) February 28, 2024
இதேபோல் கொழுக்குமலை போகிறவர்கள் அப்படியே மூணாறில் இருந்து 42 கிலோ மீட்டர் தூரத்தில் பூப்பாறை அருகே அமைந்துள்ள சந்தாம்பாறைக்கும் சென்று வருவார்கள் . சாந்தாம்பாறை பகுதியிலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் சதுரங்க பாறை என்ற சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. இந்த இடமும் தமிழ்நாட்டுக்கு சொந்த இடமாகும்.. ஆனால் கேரளா வழியாகவே வரமுடியும்.. இங்கிருந்து ஒருபக்கம் தமிழ்நாட்டையும் மறுபக்கம் கேரளாவையும் பார்க்க முடியும். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டம் மாவட்டத்தின் மொத்த அழகையும் ரசிக்க முடியும்.

இந்த சதுரங்கப்பாறை கிராமத்திற்கு பூம்பாறை அல்லது சூரிய நெல்லியில் இருந்து ஜீப் மூலமாக போகலாம். கொழுக்குமலையில் காலையில் சூரிய தரிசனத்தை பார்த்துவிட்டு மலைகளை ரசித்துவிட்டு மதியம் சூரிய நெல்லி வந்து அங்கிருந்து ஜீப் மூலம் சதுரங்கப்பாறைக்கு போகலாம். இதேபோல் சதுரங்கப்பாறையை அருகில் ராமக்கல் மேடு என்ற இடமும் உள்ளது. இதுவும் சிறப்பான சுற்றுலா தலம் ஆகும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications