ஊட்டி கொடைக்கானலுக்கு பதில் இப்படி ஒரு இடத்திற்கு இந்த மாசம் டூர் போங்க.. சூப்பர் இடம்
சென்னை: பொதுவாக டிசம்பர் மாதத்தில் ஊட்டி, கொடைக்கானல் கடுமையாக குளிரும், அதுமட்டுமின்றி தற்போது அரபிக்கடல் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே ஊட்டி , கொடைக்கானல் போகாமல் இந்த முறை ஏற்காடு டூர் போய் பாருங்க சூப்பராக இருக்கும்.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு அற்புதமான இடம் ஆகும்.. இந்த இடம் பலருக்கு பிடித்த இடம் ஆகும். எளிததாக சேலம் நகரில் இருந்து போய்விட முடியும். ஏற்காட்டில் அப்படி என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா.. அங்கு தற்போது வானியல் சூழல் அருமையாக உள்ளது.

வானுயர்ந்த மரங்கள், காபி செடிகள், அரிய வகை தாவரங்கள் உங்களை மலையேறும் போதே மதி மயக்கிவிடும். கிளியூர் நீர்வீழ்ச்சி, பூங்கா, ஏரி என பல்வேறு சுற்றுலா தலங்களை உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விடும்..
ஏற்காடு அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், தாவரவியல் பூங்கா போன்றவை சுற்றுலா பயணிகள் அதிகம் கவரும் இடங்கள் ஆகும். கிளியூர் நீர்வீழ்ச்சி முன் செல்பி எடுத்து அதன் அழகை ரசிக்கலாம்.
படகு சவாரியை விரும்புவோருக்கு.. படகு இல்லம் இருக்கிறது. மிதி படகு, மோட்டார் படகு, துடுப்பு படகில் சென்றவாறு சிலுசிலு காற்றுடன் இயற்கை காட்சிகளை ரசிக்கலாம். அழகு சாதன பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை ஏற்காடு கடைகளில் வாங்கலாம். பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்டவை உள்ளதால் குழந்தைகள் பார்த்த உடன் உற்சாகம் அடைவார்கள்..
அதேநேரம் ஏற்காட்டில் தற்போது கொடைக்கானல் ஊட்டி அளவிற்கு மிக கடுமையான குளிர் மற்றும் மழை இருக்காது,. அதேநேரம் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நாமே அங்கு சில நாட்கள் வாழலாம் என்ற நிலை தான் இருக்கும். இயற்கை விரும்பிகளுக்கு பிடித்த ஊர் என்றால் அது ஏற்காடு தான்,. ஏனெனில் எளிதாக சேலத்தில் இருந்து சென்றுவிட முடியும்.
சேலம் டூ ஏற்காடு வெறும் 30 கிமீ தூரம் தான். அதாவது சரியாக செல்வது என்றால் சென்னை பாரிஸ் கார்னரில் இருந்து வண்டலூர் தூரம். கிட்டத்தட்ட சேலத்தின் புறநகர் பகுதி போல் இருப்பதால் சேலம் சுற்றுவட்டார மக்களின் விருப்பமான இடமாக ஏற்காடு உள்ளது. சென்னையில் இருந்து சேலத்திற்கு நிறைய ரயில்கள் உள்ளன. வந்தே பாரத்தில் போனால் சேலத்தை 3.45 மணி நேரத்தில் அடைந்துவிடலாம். அங்கிருந்து வெறும் ஒரு மணி நேரத்தில் ஏற்காடு போய்விடலாம்.
ஏற்காட்டில் தங்கி சுற்றி பார்க்க கொடைக்கானல், ஊட்டி போல் எல்லாம் அதிகமான கட்டணம் இருக்காது. குறைவான கட்டணமே இருக்கும். நாரம்ல் ரயிலில் சென்றால் கூட ஐந்து மணி நேரத்தில் போய்விட முடியும் அங்கிருந்து ஒரு மணி நேரத்தில் ஏற்காடு போகலாம்.. போய் பாருங்கள்.. ஏற்காடு எப்படி உள்ளது என்பதை உணருவீர்கள்..
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications