கடவுள் தேசமே போக விரும்பும் கனவுப்பாதை.. மூணாறு-தேனி சாலையில்.. பர்ஸில் பணம் இனி முக்கியம்
மூணாறு: இந்தியாவில் இவ்வளவு அழகான மலைப்பாதை சாலைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம்.. தென்னிந்தியாவில் ஒரு மலைச்சாலை மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றால் அது மூணாறு-தேனி சாலை தான். அந்த சாலையில் மூணாறு முதல் போடி மெட்டு வரை சாலை வடிகால் வசதியுடன் தரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போது புதிய சுங்கச்சாவடி திறக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் சுங்கவரி கட்டணம் செலுத்தி சென்றன.
கடவுள் தேசமான கேரளா, அப்படி புகழப்பட முக்கிய காரணமான மாவட்டங்களில் இடுக்கியும் ஒன்று.இடுக்கி மாவட்டம் என்பது கேரளாவின் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒன்று. முற்றிலும் மலையிலேயே அமைந்துள்ள இந்த மாவட்டம் கோட்டயத்தை தாண்டி, அந்த பக்கம் எர்ணாகுளம் வரை பரந்து விரிந்து கடக்கிறது. சுமார் 100 கிலோ மீட்டர் மலைப்பரப்பளவில் கட்டப்பனை, தொடுபுழா, குமுளி, மூணாறு, நெடுங்கண்டம் ஆகிய மிகப்பிரபலமான ஊர்கள் உள்ளன. தேக்கடி,இடுக்கி அணை, மூணாறு உள்ளிட்ட ஏராளமான புகழ் பெற்ற சுற்றுலா தலங்கள் இருக்கிறது.

இடுக்கி மாவட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் இருந்து சென்றால், தேனி மாவட்டம் வழியாக போவதுதான் எளிதாக இருக்கும். மதுரையில் இருந்து கொச்சி செல்ல மூணாறு வழியாக தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை என்று அழைக்கப்படுகிறது.
இந்த சாலையில் மூணாறில் இருந்து போடி மெட்டு வரையிலான 42 கிலோ மீட்டர் தூர சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாலை என்பது இந்தியாவின் புகழ் பெற்ற சாலையாக மாறிவிட்டது. மூணாறுக்கு சுற்றுலா வருவோர், இந்த சாலையில் பயணிப்பதற்காகவே வரும் அளவிற்கு தரமாக அமைக்கப்பட்டுள்ளது. தேயிலை தோட்டங்கள், அடர்ந்த காடுகளுக்கு நடுவே வளைந்த வளைந்து செல்லும் இந்த சாலை மிக அற்புதமான பயண அனுபவத்தை தருகிறது. அதுமட்டுமின்றி மூணாறுக்கு வரும் சுற்றுலா வாகனங்கள், பொதுமக்களின் வாகனங்கள், தமிழ்நாட்டில் இருந்து மூணாறுக்கு வரும் வாகனங்கள் முன்பை விட தற்போது குறைந்த நேரத்தில் மூணாறுக்கு போக முடிகிறது. தமிழ்நாட்டில் இருந்து மூணாறு வரும் சுற்றுலா பயணிகள் போடிமெட்டு-மூணாறு சாலையில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்,
இந்தநிலையில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையம் சார்பில் மூணாறு-போடிமெட்டு சாலையில் சுங்கச்சாவடி அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மூணாறை அடுத்த லாக்காடு பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கும் பணி நடந்து வந்தது. பணிகள் முடிவடைந்ததை அடுத்து நேற்று சுங்கச்சாவடி திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து போடிமெட்டு வழியாக மூணாறு, அடிமாலி, எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற வாகனங்களும், எர்ணாகுளம், அடிமாலி, மூணாறு பகுதிகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு சென்ற வாகனங்களும் இந்த சுங்கச்சாவடியில் சுங்கவரி செலுத்திதான் செல்கின்றன.
இந்த சுங்கச்சாவடி மூலம் வசூலாகும் ெதாகையை கொண்டு மூணாறு-போடிமெட்டு சாலையில் பராமரிப்பு பணிகளை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது மலைச்சாலை என்பதால் எளிதில் சேதமடைய வாய்ப்பு என்பதால், விரைவில் சீரமைக்க சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பது அவசியம் என்பதால் எந்த எதிர்ப்பும் வரவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications