Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடைக்கானல் செல்ல புதிய பாதை .. அமைச்சர் எவ வேலு சொல்வது இந்த பாதையைத் தானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொடைக்கானலுக்குச் செல்லும் மாற்றுப்பாதை அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் எ.வ.வேலு சட்டப் பேரவையில் இன்று பதில் அளித்தார். ஆனால் அந்த வழிகள் குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.. உண்மையில் தற்போதைய நிலையில் கொடைக்கானலின் பெருமாள் மலை வரை செல்ல மூன்று பாதைகள் உள்ளன. ஆனால் பெருமாள் மலையில் இருந்து கொடைக்கானல் நகர் செல்லவே மாற்றுப்பாதை தேவையாகும். அந்த மாற்றுப்பாதை பற்றி பார்ப்போம்.

கொடைக்கானல் இந்தியாவின் மிகவும் புகழ் பெற்ற கோடைவாசல் தலமாக இருக்கிறது.. உலகம் முழுவதில் இருந்தும் பலர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகிறார்கள். கொடைக்கானலுக்கு எப்போது போனாலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை சர்வ சாதாரணமாக பார்க்க முடியும். ஊட்டிக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் அதிக மக்களால் விரும்பப்படும் சுற்றுலா தலமாக இருக்கிறது.

New route to Kodaikanal Is this the route Minister Ev Velu is talking about

சுற்றுலா தலங்கள்

கொடைக்கானலில் செயற்கையாக உருவாக்கப்பட்ட மிகப்பெரிய நட்சத்திர ஏரி, வெள்ளி நீர் வீழ்ச்சி, பூம்பாறை முருகன் கோவில், மிகப்பெரிய பூங்கா, மன்னவனூர் ஏரி, கூக்கல், குணா குகை, கோக்கர்ஸ் வாக், செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, குதிரை சவாரி, மிக அழகான மூங்கில் காடுகள் என ஏராளமான இடங்களை சொல்லிக் கொண்டே போகலாம். டிரக்கிங் பிரியர்களுக்கு வெள்ளகவி சாலை, கொடைக்கானல் மலைக்கு கீழே கும்பக்கரை அருவி, கொடைக்கானலில் ஐந்து வீடு அருவி என பல சுற்றுலா தலங்கள் உள்ளன.

ஐபி செந்தில்குமார் கேள்வி

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பழனி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ செந்தில்குமார் பேசுகையில், "கொடைக்கானலில் நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.. இந்நிலையில் வார இறுதி நாட்களில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் மாற்றுப்பாதை அமைப்பதற்கான நடவடிக்கை எந்த அளவில் உள்ளது?" என்று கேள்வி எழுப்பினார்.

எவ வேலு பதில்

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, "கொடைக்கானலுக்கு இந்தியா முழுவதில் இருந்து சுற்றுலாப் பயணிகள் நாள் தோறும் வந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, நமது சட்டப்பேரவை உறுப்பினர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் நானே நேரில் சென்று ஆய்வு செய்தேன். தற்போது மாற்றுப்பாதைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது" என்றார்.

3 வழிகள் உள்ளன

அமைச்சர் எவ வேலு பதில் அளித்தாலும் எந்த வழிஎன்பதை இன்று தெரிவிக்கவில்லை.. தற்போதைய நிலையில் கொடைக்கானல் செல்ல வத்தலக்குண்டு காட்ரோடு வழியாக ஒரு வழி, பழனி வழியாக இன்னொரு வழி, பெரியகுளம் அடுக்கம் வழியாக இன்னொரு வழி என மூன்று வழி உள்ளது. இந்த மூன்று வழிகளில் வத்தலக்குண்டு காட்ரோடு வழி மட்டுமே பிரதான வழியாகும். இதில் சர்வ சாதாரணமாக இரண்டு வாகனங்கள் எளிதாக போக முடியும். பாதையும் மிகவும் கடினமாக இருக்காது. அடர்ந்த வனப்பகுதி வழியாகவே செல்லும் என்றாலும், எளிதாக எந்த நேரமும் போய் வரலாம்.

அடுக்கம் வழி

ஆனால் பழனி வழி சற்று குறுகிய வழி ஆகும். தேனி பெரியகுளம் வழியாக அடுக்கும் வழியாக 3வது பாதை உள்ளது. இது மிகவும் செங்குத்ததான வழியாகும். கனரக வாகனங்களுக்கு உகந்ததுஅல்ல.. கார் அல்லது இருசக்கர வாகனங்களே சென்றுவர எளிதாக இருக்கும். அதேநேரம் மண் சரிவு அபாயம் அதிகம் உள்ள சாலையாக அடுக்கம் சாலை இருக்கிறது..

பெருமாள் மலை வழி

ஆனால் மேற்கண்ட மூன்று சாலைகளுமே பெருமாள் மலையில் இணைந்துவிடும். அதன்பிறகு கண்டிப்பாக ஒற்றை பாதையில் தான் வெள்ளிநீர் வீழ்ச்சி வரை போக வேண்டும். மிகவும் குறுகலான சாலையாகும். இரண்டு வாகனங்கள் மிகவும் கஷ்டப்பட்டே செல்ல வேண்டும். வெள்ளி நீர் வீழ்ச்சி பகுதியில் நெரிசல் ஏற்பட்டால் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடும். தற்போது கோடைக்காலம் என்பதால் நெரிசல் இங்கு அதிகமாகவே இருக்கும்.

வில்பட்டி வழி

தற்போதைய நிலையில் பெருமாள் மலையில் இருந்து நகருக்குள் செல்லவே சாலை தேவையாகும். அதற்கு சாலை அமைக்க வேண்டும என்றால் வில்பட்டி பகுதியில் மட்டுமே ஒரு வழி உள்ளது. அதுவும் சவாலான பகுதியாகும். அதன்படி, கொடைக்கானல் வில்பட்டி கிராமம் முதல் கோவில்பட்டி பேத்துப்பாறை வழியாக பெருமாள் மலைப் பகுதியில் மாற்றுப் பாதை அமைக்க சாத்திய கூறுகள் உள்ளதா? என ஆய்வுகள் நடந்து வருகிறது.

பேத்துப்பாறை டூ பெருமாள்மலை

வில்ப்பட்டி கோவில்பட்டி டிவிஎஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் சாலைகளையும் அளவிடும் பணிகள் சில மாதங்கள் முன்பு நடந்தது. இந்த சாலை 7 அடி ஆக அகலப்படுத்தினால், இத்துடன பேத்துப்பாறை வழியாக பெருமாள் மலைக்கு புதிய பாதை அமைத்தால் நகருக்குள் எளிதாக போய்வர முடியும். இதற்கு தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+