ஊட்டி போறவங்களின் கனவு சார்.. மலை ரயிலில் போக விரும்புவோருக்கு மகிழ்ச்சியான செய்தி
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் ஏறி பயணம் செய்வது என்பது வெளிநாட்டினர் கனவு.. எனவே எப்போதுமே இந்த ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட முடியாது. இதனால் சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணிக்க முடியாமல் காரில் ஏக்கத்துடன் ஊட்டி போய் வருவார்கள்.. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு கோடை கால சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வகையில் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மலை ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளைக் கண்டு ரசித்து வருகிறார்கள்.

மிகவும் பழமை வாய்ந்த மலை ரயிலை கடந்த 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்து மலை ரயிலுக்கு பெருமை சேர்த்தது. இந்தியாவில் இமயமலை ரயிலுக்குப் பிறகு இந்த அந்தஸ்தைப் பெற்ற இரண்டாவது மலை ரயில் இதுவாகும். செங்குத்தான மலைப்பாதையில் ஏறுவதற்காகப் பிரத்யேகமான 'ரேக் அண்ட் பினியன்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்தியாவின் ஒரே ரயில் இதுதான்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்குச் செல்ல சுமார் 4 மணி நேரம் 50 நிமிடங்கள் ஆகிறது ஊட்டியில் இருந்து கீழே இறங்க சுமார் 3 மணி நேரம் 30 நிமிடங்கள் ஆகிறது. இந்த மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை 7.10 மணிக்கு புறப்பட்டு பகல் 12 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது.
ஊட்டி மலை ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய நீண்ட நாளைக்கு முன்பே 'IRCTC' இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். கடைசி நேரப் பயணத்திற்கு மேட்டுப்பாளையம் நிலையத்தில் ' பொது டிக்கெட்' மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே வழங்கப்படும். இந்த டிக்கெட்டை வாங்க ஒரு நாள் இரவு பகல் காத்திருந்து வாங்குவார்கள். அந்த அளவிற்கு முக்கியமான சுற்றுலா ரயிலாகும். இதில் 250 பாலங்கள் மற்றும் 16 சுரங்கப்பாதைகளை ரயில் கடந்து செல்லும். கல்லார், ஹில் குரோவ் , குன்னூர் மற்றும் லவ்டேல் ஆகிய நிலையங்கள் மிகவும் அழகானவை ஆகும்.
இந்த நிலையில் தற்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு கோடைகால சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அதாவது மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் மார்ச் 27 (நேற்று) முதல் வருகிற ஜூலை மாதம் 5-ந்தேதி வரை வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நேற்று சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டது.
சிறப்பு மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் ரயில் நிலையத்திற்கு காலை முதலே வந்த வண்ணம் இருந்தனர். சிறப்பு மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு காலை 9.10 மணிக்கு புறப்பட்டு சென்றது. மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். அதேபோல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு இன்று 28-ந்தேதி முதல் ஜூலை மாதம் 6-ந்தேதி வரை சனி, திங்கட்கிழமைகளில் இயக்கப்படுகிறது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications