வண்டியை கொடைக்கானலுக்கு விடுங்க தம்பி.. வந்தது முதல்வர் ஸ்டாலின் மட்டுமல்ல.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்
கொடைக்கானல்: அடிக்கிற வெயிலுக்கு வண்டியை கொடைக்கானலுக்கு விடுங்க தம்பி என்று முதல்வர் ஸ்டாலினே சென்னையில் இருந்து கொடைக்கானல் வரும் போது, சாமானிய மக்கள் மட்டும் சும்மா இருப்பார்களா.. மொத்தமாக இன்று கிளம்பி வந்துவிட்டார்கள். நாளை ஞாயிறு என்பதால் இன்றே ஏராளமானோர் வந்துள்ளார்கள். இதன் காரணமாக கொடைக்கானலில் மலைச்சாலையில் நீண்ட தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் சர்வதேச அளவில் புகழ் பெற்ற இந்திய சுற்றுலாதலங்களில் ஒன்றாகும். இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட மக்கள் ஆண்டு முழுவதும் சுற்றுலா செல்வார்கள்.. இவர்களை தவிர கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அதிகமாக வந்த செல்வதும் வழக்கம்.. வட இந்திய மாநிலத்தவரும், வெளிநாட்டவரும் அதிகம் வந்து செல்லும் கோடைவாசல் தலமாக கொடைக்கானல் இருக்கிறது.

சென்னை, பெங்களூர், கோவை,மதுரை,திண்டுக்கல், தேனி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்ட மக்களும் ஏப்ரல் 23ம் தேதி ஓட்டுப்போட சொந்த ஊர் வந்தார்கள். ஓட்டுப்போட்ட உடன் அடுத்த நாளே வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி கொடைக்கானலுக்கே வந்திருக்கிறார்கள். கொடைக்கானலில் திரும்பிய பக்கம் எல்லாம் வாகனங்கள் தான்.
கொடைக்கானலில் சீதோஷ்ண நிலை இன்னும் மக்களை மகிழ்விக்கும் அளவிற்கு எல்லாம் மாறவில்லை.. ஆனால் கிளைமேட் அருமையாகவே இருக்கிறது. வெயில் சற்று இருந்தாலும், தரையில் இருக்கும் அளவிற்கு இல்லை.. இரவில் நல்ல குளிரும், மாலையில் மஞ்சமூட்டமும் இருக்கிறது. ஆளையே மயக்கும் மலை தொடர்கள் மற்றும் காடுகள், மெய்சிலிர்க்க வைக்கும் பிரம்மாண்டமான நட்சத்திர ஏரி, அருவிகள் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். கொடைக்கானலில் இன்று இரவு தங்கி குளுகுளு கால நிலையை அனுபவிக்க பல பேர் வந்துள்ளார்கள்.
தமிழ்நாட்டின் பிற ஊர்களில் எல்லாம் தற்போது வெயில் கடுமையாக இருக்கிறது. தப்பித்தால் போது என்ற மனநிலையில் பல பேர் கொடைக்கானலுக்கு படை எடுத்து வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் இன்னும் கோடை மழை பெரிய அளவில் வரவில்லை.. ஒருமுறை கோடை மழைவந்தால் மொத்த கொடைக்கானலும் அருமையாக மாறிவிடும் என்கிற நிலை இருந்தது. நேற்று கொடைக்கானலில் மழை பெய்த காரணத்தால் ஓரளவு குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இன்றும் மேகக்கூட்டங்கள் திரண்டு வருகின்றன. எனவே மாலை அல்லது இரவில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதனால் மகிழ்ச்சியுடன் பலர் கொடைக்கானலில் குளுகுளு சீசனை அனுபவிக்க வந்துள்ளனர். இந்த சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் வந்துள்ளார். அதேபோல் பலரும் பல்வேறு ஊர்களில் இருந்து படை எடுத்து வந்துள்ளார்கள். இதனால் கொடைக்கானல் முழுக்க வெளியூர் வாகனங்கள் அதிக அளவில் சுற்றுகின்றன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications