பழனி டூ கொடைக்கானல்.. கேரள சுற்றுலா பயணிகள் வாழ்நாளில் மறக்க மாட்டார்கள்.. வீடியோ பாருங்க
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் என்பது சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக இருக்கிறது. தினமும் பலர் சுற்றுலா சென்று வருகிறார்கள். ஒவ்வொரு வார இறுதியிலும் பல ஆயிரம் சென்று வருகிறார்கள். கொடைக்கானலுக்கு பிரதானமாக செல்ல மூன்று பாதைகள் உள்ளன. அதில் ஒரு பாதை தான் பழனி பாதை. பழனியில் இருந்து கொடைக்கானல் சென்ற சுற்றுலா வாகனத்தை காட்டு யானை ஒன்று சாலையில் வந்தவாறு வாகனத்தை துரத்தி உள்ளது. இதை பார்த்து சுற்றுலா பயணிகள் ஆடிப்போனார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது மிக மிக அழகான கிளைமேட் நிலவுகிறது. காலையில் கடும் குளிருடன் பனிமூட்டம் அதிகமாக இருக்கிறது. மாலையிலும் கடுமையான பனிமூட்டமும் குளிரும் இருக்கிறது. வாகனங்கள் சாலையில் செல்வதே தெரியாத அளவிற்கு உள்ளது. பகலில் மஞ்ச மூட்டமும் அதிகமாக இருக்கிறது. தற்போது வார இறுதி என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் செல்கிறார்கள். மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை ரசித்தபடி பேருந்துகள், கார்களில் பலர் பயணித்த வண்ணம் உள்ளார்கள்.

கொடைக்கானலை பொறுத்தவரை வத்தலக்குண்டு, காட்ரோடு பாதை தான் பிரதானமான பாதை, இந்த பாதையில் எந்த நேரமும் போய்வர முடியும். பாதையும் மிக கடினமாக இருக்காது. வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகமாக இருக்காது. அதேபோல் இரண்டாவது முக்கியமான பாதை பழனி பாதை, பழனி கொடைக்கானல் செல்லும் சாலை சற்று ஆபத்தானது.
நல்ல டிரைவிங் தெரிந்தவர்கள், மலையேற்றத்தில், கொண்டை ஊசி வளைவில் ஓட்டி பழகியவர்கள் தான் ஓட்டி செல்ல முடியும். சற்று அசந்தாலும் சிக்கலாகிவிடும். இந்த சாலை திரில்லான சாலையாக இருகும். அதேநேரம் பழனி பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் சர்வ சாதாரணமாக இருக்கும். இங்கு யானை, மான், சிறுத்தை, காட்டு பன்றிகள் அதிகமாக வசித்து வருகின்றன. சில நேரங்களில் வனவிலங்குகள் சாலைகளில் உலா வருவது வழக்கம் . நேற்று கேரளாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் டெம்போ ட்ராவலர் வேனில் பழனி வழியாக கொடைக்கானலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சில நாட்களாக நடமாடி வரும் ஒற்றைக் காட்டு யானை திடீரென சாலையில் எதிரே வந்தது கண்டு ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வாகனத்தை பின்னோக்கி நகர்த்தி வந்து கொண்டிருந்தபோது யானை சாலையோரத்தில் இருந்த வேலியை உடைத்துக் கொண்டு செல்ல முயன்றது. அப்போது திடீரென வாகனத்தை தாக்குவதற்காக துரத்தியது இதனை பார்த்த ஓட்டுனர் தொடர்ந்து பின்னோக்கி நகர்த்திக் கொண்டிருந்தார் .
பழனியில் இருந்து கொடைக்கானல் சென்று சுற்றுலா வாகனத்தை காட்டு யானை ஒன்று சாலையில் வந்தவாறு வாகனத்தை துரத்திய காட்சி இணையத்தில் பரவி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது #kodaikanal #palani pic.twitter.com/qbOLv0auAy
— velmurugan (@velmurugantheni) November 15, 2025
பின்னர் யானை நின்று விட்ட நிலையில் அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்கள் பரவி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து ஒற்றைக்காட்டு யானையின் நடமாட்டம் சாலையோரங்களில் நடமாட்டம் இருப்பதால் வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் பாதுகாப்புடன் செல்லுமாறு வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications