மூணாறு டூ கொடைக்கானல் சாலை.. வாழ்வில் ஒரு முறையாவது போக வேண்டிய 'பாம்பு நடனமாடும் காடு'
தேனி:தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தின் எல்லையில் உள்ள மூணாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. குறிப்பாக மூணாறில் இருந்து கொடைக்கானல் செல்லும் அடர்ந்த வனப்பகுதி சாலைகளில் நம்பவே முடியாத அழகான டிரக்கிங் பாதைகளும், அரிய வனவிலங்குகளும், ஆறுகளும், அருவிகளும், காடுகளும் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு இடம் தான் பாம்பாடும் சோலை என்ற தேசிய பூங்கா. அதாவது பாம்பு நடனமாடும் காடு என்று பெயர்.. கேரளாவின் மிகக்சிறிய தேசிய பூங்காவாகும்.
மூணாறு சுற்றுலா செல்ல வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும்.. அப்படி சுற்றுலா செல்வோர் ஒரே நாளில் மாட்டுப்பட்டி அணை உள்பட மூணாறை சுற்றி பார்த்தாலும், அருகில் உள்ள டாப் ஸ்டேசன், வட்டவடா,கொழுக்குமலை போன்ற பல இடங்கள்.. மூணாறு அருகில் உள்ள இடங்களை சுற்றி பார்க்கவே மூன்று நாட்கள் வேண்டும்.. ஏனெனில் அந்த அளவிற்கு சுற்றுலா இடங்கள் அதிகமாக உள்ளன.

மூணாறில் இருந்து கொடைக்கானல் செல்ல இரண்டு வனப்பாதைகள் உள்ளன. அதில் ஒன்று டாப் ஸ்டேசனில் இருந்து 24 கிமீ தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக மதிகெட்டான் சோலையை அடைந்து கொடைக்கானலின் பேரிஜம் ஏரியை அடைவது. இரண்டாவது வட்டவடாவில் இருந்து வாகங்களிலேயே எல்லை வரை சென்று சில கிலோ மீட்டர் கரடு முரடனா பாதையில் சென்று கொடைக்கானலின் கிளாவரையை அடைய முடியும்.இதில் கிளாவரை ரூட் இன்று வரை மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
டாப் ஸ்டேஷன் டூ பேரிஜம் ஏரி
ஆனால் டாப் ஸ்டேஷனில் இருந்து மதிகெட்டான் சோலை வழியாக பேரிஜம் ஏரிக்கு செல்லும் பாதையில் போக முடியாது. ஒரு காலத்தில் வெள்ளைக்காரர்கள் பயன்படுத்தி எஸ்கேப் ரூட் இதுதான்.இந்த பாதையில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இங்குதான் கேரளாவின் மிகச்சிறிய தேசிய பூங்காவான பாம்பாடும் சோலை தேசிய பூங்கா இருக்கிறது.

பாம்பாடும் சோலை
இடுக்கி மாவட்டத்தில் உள்ள பாம்பாடும் சோலை தேசிய பூங்காவில் அரிய தாவரங்கள் மற்றும் அரிய வகையான விலங்குகள் வாழ்கின்றன. சுமார் 12 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள 'பாம்பாடும் சோலை' என்ற பெயரின் அர்த்தம் 'பாம்பு நடனமாடும் காடு' ஆகும். தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான மூணாறு மற்றும் தேவிகுளம் உள்பட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலும் தமிழில் தான் பெயர்கள் வைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் பாம்பாடும் சோலையின் பெயரும் வைக்கப்பட்டுள்ளது.
மூணாறு அருகே 35 கி மீ
தெற்கு மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பாம்பாடும் சோலை பூங்கா, மூணாறிலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த பூங்கா ஆண்டின் பெரும்பாலான நாட்களில் பனி மூட்டங்கள் மற்றும் மேககூட்டங்களால் காணப்படும். எனவே கிளைமேட் எப்போதுமே அருமையாக இருக்கும். இங்கு வடகிழக்கு பருவமழையின் போது பலத்த மழை பெய்யும். இந்த பூங்காவில் 22 வகையான மரங்கள், 74 வகையான மூலிகைகள் உள்ளது. யானை, காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி, சாம்பார் மற்றும் லங்கூர் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன.

டிரக்கிங் பிரியர்கள்
பாம்பாடும் பூங்காவின் காடுகளில் சில பகுதிகள் அற்புதமான மலையேற்றப் பாதைகளாக இருப்பது இதன் தனிச்சிறப்பு. டிரக்கிங் பிரியர்களுக்கு பிடித்த இடமாகும். இங்கிருந்து வட்டவாடாவிற்கு மலையேற்றப் பாதை அழகான காடுகளுடன் நம்மை வியக்க வைக்கும். எங்கு திரும்பினாலும் பச்சை பசேல் என்று இருக்கும் மலைகள், நீல குறிஞ்சி பூக்களுடனும் சில நேரம் மலைகள் நீல நிறத்திலும் இருக்கும். சின்ன சின்ன மரங்களை அதிகம் கொண்ட இந்த பூங்கா மிகப்பெரிய அற்புதமான அனுபவத்தை தரும்.
மண் குடிசை
பாம்பு நடனமாடும் காடு என்று அழைக்கப்படும் இந்த பூங்காவில்,அடர்ந்த காடுகளுக்கு நடுவில் மண் குடிசைகளில் தங்கலாம். அற்புதமான அனுபவத்தை தரும். பைசன் லாக் ஹவுஸ், மண் குடிசை உள்பட பல்வேறு வசதிகளை கேரள வனத்துறை ஏற்பாடு செய்து வருகிறது. டாப் ஸ்டேசனில் இருந்து வட்டவாடா சாலையில் தான் பாம்படும் சோலை தேசிய பூங்கா இருக்கிறது. வட்டவடாவில் இருந்து 9 கிமீ தூரத்தில் இருக்கிறது. மூணாறு சுற்றுலாவிற்கு திட்டமிடுவோர் போய் பாருங்கள்..
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications