ஊட்டி, கொடைக்கானலை தொடர்ந்து.. 300 ரூபாயில் சேலம் டூ ஏற்காடு மொத்த சுற்றுலா.. குட் நியூஸ்
சேலம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் மண்டலம் மூலமாக சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 04.05.2025 முதல் கோடை காலம் முடியும் வரை தினமும் காலை 8.30 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை கண்டு கழித்து மீண்டும் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாலை 7.00 மணிக்கு நிறைவு செய்யும் வகையில் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோடைக்காலத்தை ஒட்டி பலரும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, மூணாறு, வாகமன், தேக்கடி , குடகு, கூர்க் போன்ற மலைப்பிரதேசங்களுக்கு அதிக அளவில் செல்கிறார்கள்.இதில் பலர் ஊட்டி, கொடைக்கானலில் குவிந்து வருகிறார்கள். அதேபோல் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு பலர் செல்ல தொடங்கி உள்ளார்கள்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டை பொறுத்தவரை ஊட்டி, கொடைக்கானல் அளவிற்கு குளுகுளுவென இருக்காது என்றாலும், ஓரளவு கிளைமேட் நன்றாகவே இருக்கும். அடர்ந்த காடுகள், ஏரியில் படகு பயணம், காடுகளுக்கு நடுவில் வீடுகள், இரவில் குளிர் என்று கிளைமேட் சற்று வித்தியாசமாக இருக்கும்.
ஏற்காடு சுற்றுலா தலத்தை பொறுத்தவரை சேலத்திற்கு அப்படியே தலை மேல் அமைந்துள்ள சுற்றுலா தலம் ஆகும். கிழக்கு தொடர்ச்சி மலை சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள சுற்றுலா தலம் ஆகும. ஏற்காடு சுற்றுலா தலத்தை பெறுத்தவரை கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அதாவது 4969 அடி உயரத்தில் இருக்கிறது. சேலத்திலிருந்து ஏற்காட்டுக்கு பேருந்து வசதி அதிக அளவில் உள்ளது. சேலம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை,மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி,திருவண்ணாமலை, கோயம்புத்தூர், புதுச்சேரி, திருப்பதி உள்பட இந்தியாவின் எங்கு வேண்டுமானாலும் போக முடியும்.
ஏற்காட்டில் உள்ள ஏரி மற்றும் அண்ணா பூங்கா பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்த இடமாகும். இதேபோல் இந்திய தாவரவியல் கழகத்தால் பராமரிக்கப்படுகின்ற தாவரவியல் பூங்கா இருக்கிறது. மேலும் ஏற்காட்டில் இருந்து 3 கி.மீ. தொலைவில் கிள்ளியூர் நீர்வீழ்ச்சியும் சிறந்த சுற்றுலா தலம் ஆகும். ஏரியிலிருந்து வழிந்தோடும் நீர் இங்கு நீர்வீழ்ச்சியாக விழுகிறது. இது பார்வையாளர்களை வெகுவாக கவரும் இடமாக இருக்கிறது. சேர்வராயன் கோவில், பகோடா காட்சி முனை, ராஜ ராஜேஸ்வரி கோவில், பட்டுப்பண்ணை ரோஜா தோட்டம் என ஏராளமான இடங்கள் உள்ளன.
ஏற்காட்டை பொறுத்தவரை திடீரென மழை பொழியும் வாய்ப்பு அதிகம் உள்ள இடம் ஆகும்.சுற்றுலா பயணிகள் செல்லும் நாளில் மழை விழுந்தால், கிளைமேட் மிக அருமையாக மாறிவிடும். அடிக்கடி மழையின் காரணமாக அங்கு வானிலை அடியோடு மாறும்.இதை ரசிக்கவே சேலத்தில் இருந்து பலர் அடிக்கடி ஏற்காடு செல்வார்கள். தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. அவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் மண்டலம் மூலமாக சுற்றுலா பயணிகளின் வசதிக்காக 04.05.2025 முதல் கோடை காலம் முடியும் வரை தினமும் காலை 8.30 மணிக்கு சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை கண்டு கழித்து மீண்டும் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு மாலை 7.00 மணிக்கு நிறைவு செய்யும் வகையில் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல பேக்கேஜ் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு பயணிக்கு கட்டணமாக 300 வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு 150 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 300 ரூபாய் பேக்கேஜ் திட்டத்தை பொறுத்தவரை சேலத்தில் பேருந்தில் ஏறி ஏற்காட்டில் உள்ள கரடியூர் காட்சி முனை, சேர்வராயன் கோவில், மஞ்சக்குட்டை காட்சி முனை, பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் கார்டன், ஏற்காடு ஏரி, அண்ணா பூங்கா, மான் பூங்கா, தாவரவியல் தோட்டம் ஆகிய 11 இடங்களை சுற்றி பார்த்துவிட்டு வரலாம்..












Click it and Unblock the Notifications