படம் நான் பார்க்கல, கருத்து சொல்ல முடியாது.. மாமன்னன் குறித்த கேள்வி.. ஒரே வரியில் முடித்த எடப்பாடி
சேலம்: உதயநிதி நடிப்பில் வெளியாகி இருக்கும் மாமன்னன் படம் அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலின் வாழ்க்கை வரலாறை காட்டும் விதமாக இருப்பதாகவும் அது குறித்து உங்கள் கருத்து என்ன? என்று எடப்படி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு எடப்பாடி அளித்த பதிலை இங்கே பார்க்கலாம்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாமன்னன்'. கடந்த மாதம் 29 ஆம் தேதி ரிலீசான இந்த திரைப்படம் ஒடுக்கப்பட்டோரின் அரசியலைப் பேசும் படமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார்.

இந்த படத்தில் சமத்துவ சமூகநீதி மக்கள் கழகம் என்ற கட்சியின் எம்.எல்.ஏவாக வடிவேலு உள்ளார். காசியாபுரம் தனித் தொகுதி எம்.எல்.ஏவான மாமன்னன், சாதி ரீதியாக சொந்தக் கட்சிக்குள்ளேயே ஒடுக்கப்படுகிறார். அதை மீறி எப்படி மிக உயரிய இடத்துக்குப் போகிறார் என்பதே மாமன்னன் படத்தின் கதை. இந்த படத்தில் வடிவேலு சபாநாயகர் பதவியில் அமர்வது போல் கிளைமாக்ஸ் காட்சியில் காட்டப்பட்டுள்ளது.
எனவே, மாமன்னன் கதாபாத்திரம் அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலை காட்டுவதாக பல்வேறு தரப்பிலும் பேசப்பட்டது. சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பாக பலரும் பதிவிட்டதை காண முடிந்தது. எனினும் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது தந்தையின் கதாப்பாத்திரம் என்று பேட்டி ஒன்றில் கூறியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார். அதிமுக முன்னாள் சபாநாயகரின் வாழ்க்கை வரலாறு பற்றிய படமாக மாமன்னன் எடுத்துள்ளதாக பேசப்படுவது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த எடப்படி பழனிசாமி கூறியதாவது:- நான் மாமன்னன் படம் பார்க்கல...பார்க்காமல் எப்படி கருத்து சொல்ல முடியும். நீங்கள் உதயநிதி ஸ்டாலினின் படம் பார்க்கிறீர்கள். நாங்கள் பார்க்கல.. பார்த்தால்தானே கருத்து சொல்ல முடியும். எங்களுடைய இயக்கம் வேற.. அவருடைய இயக்க வேற.. எங்கள் இயக்கத்தில் யாராவது நடித்து இருந்தால் அதுபற்றி கருத்து கேட்டால்.. படம் பார்க்கும் பட்சத்தில் நான் கருத்துக்களை கூற தயாராக இருக்கிறேன்" என்றார்.
-
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications