கோவை மக்கள்.. சில்லுன்னு ஜில் பண்ணலாம்.. பக்கத்திலேயே இருக்கும் டாப் கோடைவாசஸ்தலங்கள்
கோவை: சம்மர் லீவும் விடப்பட்டுள்ளதால் கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க சுற்றுலாப்பயணிகள் தயாராகி வருகிறார்கள். பொதுவாக கோடைகாலங்களில், இதமான தட்பவெப்ப நிலை நிலவும் மலை வாசஸ்தளங்களுக்கு செல்லத்தான் சுற்றுலாப்பயணிகள் விரும்புவார்கள். அந்த வகையில் கோவைக்கு அருகே உள்ள மலைவாசஸ்தலங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
கோடைக்காலம் வந்துவிட்டது. வழக்கம் போல் என்று சொல்வதை விட இந்த ஆண்டு வழக்கத்திற்கு மேலாக சூரியன் சுட்டெரித்து வருகிறது. வெளியில் போனால் வெப்பம், வீட்டுக்குள் சென்றால் புழுக்கம் என மக்களை இந்த கோடைக்காலம் வாட்டி வதைக்கிறது. கோடை விடுமுறையும் விடப்பட்டு இருப்பதால் பலரும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உகந்த இடங்களுக்கு விசிட் அடிக்க பிளான் செய்து வருகிறார்கள்.

அதிலும் இதுபோன்ற வெப்ப காலங்களில் சுற்றுலா பயணிகள் செல்ல விரும்பும் முக்கிய இடங்களில் மலைவாசஸ்தலங்கள்தான். ஏனெனில் அங்கு தான் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருக்காது என்பதால் கோடைக்காலங்களில் சுற்றுலாப்பயணிகளின் முதல் விருப்பத்தேர்வுகளில் மலை பிரதேசங்களும் இடம் பிடிக்கும்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய நகரமான கோவைக்கு அருகில் 10 சிறந்த மலைவாசஸ்தலங்களை பற்றி இங்கே பார்ப்போம். கோவையை பொறுத்தவரை கல்வி மற்றும் டெக்ஸ்டைல் தொழிற்சாலைகளுக்கு சிறந்த ஊராகத்தான் நாம் கேள்வி பட்டு இருப்போம். இன்னொரு பக்கம் கோவை பசுமை நிறைந்த பகுதியாகவும் உள்ளது.
கோவைக்கு அருகில் அமைந்து இருக்கும் இந்த மலைவாசஸ்தலங்கள் இயற்கை பேரதிசயங்களை உள்ளடக்கியதோடு நம்மை மெய்சிலிர்க்க வைப்பதாகவும் இருக்கும். சரி இங்கே கோவைக்கு அருகில் அமைந்து இருக்கும் 10 மலைவாசஸ்தலங்களை பார்க்கலாம்.

*ஊட்டி: இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் இடம் ஊட்டி. சுற்றுலாப்பயணிகள் இயற்கை காட்சிகளை கண்டு பரவசம் அடையும் முக்க்கிய இடம் இதுதான். கோவையில் இருந்து 75 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஊட்டி, எங்கு பார்த்தாலும் பச்சை கம்பளியை போர்த்தி வைத்தது போல காணப்படும்.
இந்தியாவிலேயே மிக அழகான மலைப்பிரதேச ஸ்தலங்களில் ஒன்றாக ஊட்டி உள்ளது. தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் விடுதலைக்கு முன்பாக ஆங்கிலேய அரசின் கோடை விடுமுறை பகுதியாக இருந்தது. ஹனிமூன் செல்லும் தம்பதிகளுக்கும் சிறந்த இடமாக ஊட்டி உள்ளது. ஏரிகள், தோட்டங்கள், மலையுச்சிகள், நீர்வீழ்ச்சிகள் போன்றவை கண்களுக்கு விருந்தாக இருக்கும். அதுபோல இங்குள்ள மலை ரயிலும் மிகவும் புகழ் பெற்றது.
* கொடைக்கானல்: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் இடம் கொடைக்கானல். கோடை விடுமுறையை சுற்றுலாப்பயணிகள் கழிக்க சிறந்த மலைப்பிரதேசமாக கொடைக்கானல் இருக்கும். இங்குள்ள மலை உச்சிகள், நீர் விழ்ச்சிகள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடும். மேகங்கள் கண்முன்னே தவழ்ந்து செல்வதை இங்கே உணரலாம்.

* மூணாறு: கேரள மாநிலத்தில் அமைந்துள்ள மூணாறு கோவையில் இருந்து 155 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. பரந்த தேயிலைத் தோட்டங்கள் உள்ளிட்டவற்றை மூணாறு கொண்டுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாறு, கடல் மட்டத்தில் இருந்து 1800 மீட்டர் உயரத்தில் உள்ளது. தென்னகத்து காஷ்மீர் என்றும் மூணாறு அழைக்கப்படுகிறது.
* ஏற்காடு: அதேபோல், ஏற்காடு மலையும் கோடை விடுமுறையை சுற்றுலாப்பயணிகள் கழிக்க சிறந்த ஸ்பாட் ஆக இருக்கும். 7 காடுகளின் நிலம் என்று அழைக்கப்படும் ஏற்காடு சேலம் மாவட்டத்தில் உள்ளது. கோவையில் இருந்து சுமார் 200 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இதை ஏழைகளின் ஊட்டி என்றும் ஏற்காட்டை அழைப்பார்கள். சுற்றுலாப்பயணிகளுக்கு பெரிய பட்ஜெட்டையும் இது வைக்காத இடமாகவே உள்ளது.

* வால்பாறை: கோவை மாவட்டமான வால்பாறை கோவையில் இருந்து 105 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. வால்பாறையில் அமைந்து இருக்கும் தொடர்ச்சியான மலைத்தொடர்கள் கண்களை கவரும் வகையில் இருக்கும். இங்கு காணப்படும் தோயிலை எஸ்டேட்கள் , அருவிகள் போன்றவை சுற்றுலாப்பயணிகளை வெகுவாக ரசிக்க வைக்கும்.
* டாப்ஸ்லிப்: கோயம்புத்தூரிலிருந்து 90 கிமீ தொலைவில் டாப்ஸிலிப் அமைந்துள்ளது. எங்கும் கண்ணுக்கு குளிர்ச்சியாக பசுமை நிறைந்து காணப்படும். டாப்ஸ்லிப் செல்ல முன்னரே வனத்துறையினரிடம் அனுமதி பெறவேண்டும் என்பது முக்கியமானது.
* கோத்தகிரி: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவில் கோத்தகிரி உள்ளது. கோத்தகிரியில் எங்கு பார்த்தாலும் காணப்படும் தேயிலை தோட்டங்கள் கண்ணுக்கு விருந்து அளிப்பதாக இருக்கும்.
* இடுக்கி: கேரளாவில் உள்ள மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்றாகும். சுற்றுலாப்பயணிகளுக்கு இந்த இடம் சிறந்த தேர்வாக இருக்கும். இடுக்கி அணை, தேக்கடி, மூணாறு ஆகியவை இடுக்கி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலம் ஆகும். தேக்கடியில் படகு சவாரியும் மிகவும் பிரபலமானது.
* அதேபோல தேவிகுளம், முதுமுலை, திரிச்சூர் ஆகிய மலை வாசஸ்தலங்கலும் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவரும் வகையில் உள்ளது. எனவே இந்த கோடை விடுமுறையை உற்சாகமாக கழிக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த பகுதிகளுக்கு விசிட் அடிக்கலாம்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications