Exclusive: இலங்கைக்கு சலுகை கட்டணத்தில் செப்.15 வரை கப்பலில் செல்ல சூப்பர் சான்ஸ்- மிஸ் பண்ணாதீங்க!
சென்னை: தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு மிக குறைந்த கட்டணத்தில் செப்டம்பர் 15 வரை கப்பலில் சென்று வருவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி தேவாலய திருவிழா மற்றும் இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு தமிழ்நாடு- இலங்கை இடையே கப்பல் சேவையை நடத்தும் https://sailindsri.com/ நிறுவனம் இந்த சலுகையை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு- இலங்கை இடையே நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு ஆகஸ்ட் 16-ந் தேதி முதல் பயணிகள் கப்பல் சேவை இயக்கப்படுகிறது. சிவகங்கை என்ற பெயரிலான இந்த கப்பல் சேவை தற்போது நடைபெற்று வருகிறது. எக்கானமி வகுப்பில் பயணிக்க ரூ5,000 கட்டணமும் பிரீமியம் வகுப்பில் பயணிக்க ரூ7,000 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. கப்பலிலேயே உணவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 2 மணிநேர பயணம். இந்த கப்பலில் ஒரு நபர் 60 கிலோ வரை பொருட்களை எடுத்துச் செல்லலாம்.

தற்போது பயணிகள் கப்பல் சேவையானது செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இலங்கை, தமிழ்நாடு பயணிகளுக்காக இந்த கப்பல் சேவையை நடத்தும் https://sailindsri.com/ நிறுவனம் சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு சலுகை தொடர்பாக கப்பல் சேவையை நடத்தும் https://sailindsri.com/ நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ரமேஷ் நமது ஒன் இந்தியா தமிழ் நிறுவனத்திடம் தெரிவிக்கையில், இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் கோவிலில் உற்சவ விழா நடைபெறுகிறது. அதேபோல தமிழ்நாட்டின் வேளாங்கண்ணி தேவாலய திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு செப்டம்பர் 15-ந் தேதி வரை கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படுகிறது. இதனை இருநாட்டு பயணிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இலங்கைக்கு கப்பல் பயணம் மேற்கொள்ள https://sailindsri.com/ தளத்தில் முன்பதிவு செய்யலாம்.












Click it and Unblock the Notifications