கொடைக்கானல் போறீங்களா.. சுற்றுலாப் பயணிகளுக்கு தமிழ்நாடு வெதர்மேன் தந்த எச்சரிக்கை
சென்னை: கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக காட்டுத் தீ எரிந்து வருவதால், சுற்றுலாப் பயணிகளுக்கு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச சுற்றுலா தளமான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரம் கோடை வெயில் காரணமாக தன் பொழிவை இழந்து காணப்படுகிறது. அடிக்கடி கோடை மழை பெய்தால் மட்டுமே நிலைமை சரியாகும் என்கிற நிலையில். ஏனெனில் கொடைக்கானல் பகுதியில் வறண்ட வானிலை காரணமாக மலைப்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல் வன சரணாலயத்தில் 7 வனச்சரங்கள் இருக்கின்றன. இங்கு லட்சக்கணக்கான ஹெக்டேர் வனப்பகுதி உள்ளது. ஆண்டுதோறும் கோடை வெயிலின் தாக்கத்தில் இவ்வனப்பகுதிகள் காட்டுத் தீயால் வெகுவாக பாதிக்கப்படுவது நடக்கிறது. இந்த தீயை கட்டுப்படுத்த வனத்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. வனச்சரங்களில் தீ ஏற்படும் அபாய பகுதியை கண்டறிந்து தீ தடுப்பு கோடுகள் அமைத்து தீயை கட்டுப்படுத்தும் பணியினை வனத்துறை மேற்கொண்டு வருகிறது.
எனினும் வறட்சி அதிகமாக உள்ளதால், திடீரென கொடைக்கானலை ஒட்டியுள்ள பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு, பல ஏக்கர் அளவிலான மரங்கள், செடி கொடிகள் எரிந்து நாசமாகி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்களிடையே இது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

வறண்ட வானிலை காரணமாக, மலைப்பகுதிகளில் உள்ள மரங்கள், செடி கொடிகள், புதர் செடிகள் உள்ளிட்டவை காய்ந்து தீப்பிடித்து எரிவதாக கூறப்படுகிறது. அந்த தீயினை வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சிரமப்பட்டு கட்டுப்படுத்தி வருகிறார்கள்.
அண்மையில் மச்சூர், மயிலாடும்பாறை உள்ளிட்ட வனப்பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டு, பல ஏக்கர் அளவிற்கு மரங்கள் பற்றி எரிந்து சேதம் ஆகின. இதேபோல் பெருமாள் மலை வனப்பகுதி மற்றும் அதனை ஒட்டி உள்ள வருவாய் நிலப்பகுதிகளிலும், தனியார் நிலப் பகுதிகளிலும் உள்ள மரங்கள் அடர்ந்த பகுதிகளிலும் காட்டுத்தீ ஏற்பட்டு பற்றி எரிந்து பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல், பழனி சாலைப் பகுதிகளிலும் காட்டுத் தீ ஏற்பட்டு மரங்கள் பற்றி எரிந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே தீயை அணைக்க போராடும் வனத்துறைக்கு கூடுதல் நிதியும், போதிய பாதுகாப்பு உபகரணங்களும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல் ஊட்டியில் செய்வது போல் கொடைக்கானலிலும் காட்டுபகுதியில தீயை அணைக்க ஹெலிகாப்டர் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஏனெனில் மலைச்சரிவுகள், பள்ளத்தாக்குகளில், மனிதர்களால் போகவே முடியாத உயரமான இடங்களில் தீயைக்கட்டுப்படுத்த இந்த முயற்சி அவசியம் என்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.
அதேநேரம் கொடைக்கானல் சுற்றுலா வரும் பயணிகள் வறட்சி அதிகமாக உள்ள இடங்களில் எளிதில் தீப்பறக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாதும் என்றும், சிகரெட் குடித்துவிட்டு தீ வைப்பது, விளையாட்டாக தீ வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.. அப்படி செய்தால் அது பேராபத்தாக முடியும் என்பதால் வனத்துறையினர் எச்சரித்து வருகிறார்கள்.
இதனிடையே கடந்த 10 நாட்களாக கொடைக்கானலில் காட்டுத் தீ எரிந்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் கவனமாக இருக்கும் படி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications