தைப்பூசம், குடியரசு தினம்.. இன்று முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை.. டூர் போறவங்க இதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: முருகக் கடவுளின் முக்கிய திருநாளான தைப்பூசம் இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதேபோல் நாளை குடியரசு தினம், நாளை மறுநாள் சனிக்கிழமை (4வது சனி), அடுத்து ஞாயிறு என நான்கு நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

முருகக் கடவுளின் முக்கிய திருநாளான தைப்பூசம் இன்று அறுபடை வீடுகளான, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை உள்பட கோயில்களிலும், மருதமலை, குன்றத்தூர், சிவபுரி, திருப்போரூர்,குன்றக்குடி, வடலூர், வடபழனி, வயலூர், மயிலம், தோரணமலை உள்பட தமிழகத்தின் எல்லா முருகன் கோயிலிலும் இன்று தைபூசம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பழனியிலும், திருச்செந்தூரிலும் பக்தர்கள் வெள்ளம் அளவுக்கு மீறி உள்ளது.

Thaipusam, Republic Day: 4 days continuous holiday from today; Tour goers check this

முன்னதாக பெரும்பாலான மக்களின் கோரிக்கையின்படி கடந்த அதிமுக ஆட்சியில் தைப்பூசத்தை தமிழக அரசு விடுமுறை நாளாக அறிவித்தது. அதன்படியே கடந்த சில ஆண்டுகளாக தைப்பூசம் திருநாளில் தமிழகத்தில் விடுமுறை விடப்படுகிறது. தைப்பூசமான இன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, வங்கிகளும் இயங்காது.

அதைத் தொடர்ந்து 26-ந் தேதி (நாளை) குடியரசு தினத்தையொட்டி அரசு விடுமுறை என்பதால் அன்றைய தினமும் வங்கிகள் செயல்படாது. மேலும், வருகிற 27-ந் தேதி 4-வது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினமும் வங்கிகளுக்கு விடுமுறையாகும். ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை தினம் என்பதால், இன்று முதல் வருகிற 28-ந் தேதி வரை வங்கிகளுக்கு தொடர் விடுமுறையாக உள்ளது.

பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் என அனைத்து தரப்பிற்கு இந்த நான்கு நாட்கள் விடுமுறை என்பதால், சென்னையில் இருந்து பல ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். பலர் பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். இதேபோல் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மூணாறு உள்பட பல்வேற சுற்றுலா தளங்களுக்கும் இந்த நான்கு நாட்களில் மக்கள் அதிகம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கிகளுக்கு தொடர் விடுமுறை என்கிற நிலையில், ஏஜென்சிகள் மூலம் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பப்படும் காரணத்தால் பணத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. எனினும் அதிகப்படியான மக்கள் சில ஏடிஎம்களை முற்றுகையிடும் போது, சில ஏ.டி.எம்.களில் பணம் தட்டுப்பாடு உருவாகலாம். பொதுமக்கள் இந்த 4 நாட்களில் தங்களுக்கு தேவையான பணத்தை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

குறிப்பாக சுற்றுலா தளங்களில் உள்ள ஏடிஎம்களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சுற்றுலா தளங்களுக்கு போகும் முன்பே பணத்தை கையில் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. அதேபோல் மலைவாசல் தளங்களில் பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். அங்கு பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே போதுமான பெட்ரோல்களை நிரப்பி வைத்துக் கொண்டு சுற்றுலா செல்வது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+