சிக்சர் அறிக்கையில் மட்டுமே.. பல்லை உடைக்கும் பல்வீர்சிங்கை முதல்வர் ஆதரிக்கிறாரா?: அறப்போர் இயக்கம்
நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங், விசாரணையின்போது விசாரணை கைதிகளின் பற்களை கொடூரமான முறையில் பிடுங்கி சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில், பல்வீர் சிங்கை முதல்வர் காப்பாற்ற முயல்கிறாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளது அறப்போர் இயக்கம்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக இருந்தவர் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங். ஹரியானாவை சேர்ந்தவர். இந்நிலையில் தான் சிறுசிறு வழக்குகளில் சிக்கி கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையம் அழைத்து வருவோரின் பற்களை பல்வீர் சிங் மற்றும் போலீசார் பிடுங்கி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பலரும் பல்வீர் சிங்கிற்கு எதிராக குரல் கொடுக்க துவங்கினர். இதுதொடர்பாக அவர்கள் வீடியோக்கள் வெளியிட்டு தங்களுக்கு நேர்ந்த சித்ரவதையை வெளியிட்டனர். இதையடுத்து பல்வீர் சிங்கிற்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து பல்வீர் சிங் காத்திருப்பு பட்டியலுக்கு வைக்கப்பட்டார். மேலும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
பல்வீர் சிங் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பணியாற்றி வந்த காவலர்கள் ராஜ்குமார், போகபூமன், சந்திரசேகரன், ராஜகுமாரி, பெருமாள், சக்தி நடராஜன், சந்தானகுமார், மணிகண்டன் ஆகியோர் ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதோடு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. உயர்மட்ட விசாரணை அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார். உயர்மட்ட குழு விசாரணை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. எனினும், இதுவரை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில் அறப்போர் இயக்கம் ஆர்டிஐ மூலம் கேட்டுள்ள தகவல்களை தமிழக அரசு வெளியிடுமா என்றும், பல்வீர் சிங்கை முதல்வர் காப்பாற்ற முயல்கிறாரா என்றும் தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதில், "ஒரு சைக்கோ போல விசாரணை நடத்திய பல்வீர்சிங் ஐபிஎஸ் மீது மூன்று கட்ட விசாரணை முடிந்து அவரது செயலுக்கு முட்டுக்கொடுக்க முடியாமல், சாட்சிகளை கலைக்க முடியாமல் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு பல மாதங்கள் கடந்து விட்டது. ஆனால் இதுவரை ஏன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
இது வரை பல்வீர்சிங் ஐபிஎஸ் ஏன் கைது செய்யப்படவில்லை? காவல்துறைக்கு மந்திரியான முதலமைச்சர் ஸ்டாலின், ஐபிஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க பயப்படுகிறாரா? அல்லது இதுபோல வாய்க்குள் கல்லை போட்டு பல்லை உடைக்கும் சைக்கோ விசாரணைகளை அவர் ஆதரிக்கிறாரா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், "முதல்வர் அடிக்கும் சிக்சர் எல்லாம் வெறும் அறிக்கையில் தான் இருக்கு. அப்பட்டமாக சட்டத்தை மீறிய ஒரு ஐபிஎஸ் அதிகாரியை அவர் சாட்சிகளை மிரட்டி கலைக்க வாய்ப்பு உண்டு என்று தெரிந்தும் கைது செய்யாமல் பாதுகாப்பதும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் இழுத்தடிப்பதும் ஒரு மாநில அரசுக்கு அழகா?" என்றும் விமர்சித்துள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications