Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tenkasi Murder: தென்காசியில் பயங்கரம்.. பட்ட பகலில் அரசு வழக்கறிஞர் மர்ம நபரால் வெட்டி கொலை

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர் பட்டப் பகலில் மர்ம நபரால், வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். முன் பகை காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாமா? அல்லது வேறு காரணமா? என தென்காசி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஊர் மேல்லழகியான் கிராமம் பொன்விழா வீதியில் வசித்து வருபவர் குழந்தைவேல். இவரது மகன் முத்துக்குமாரசாமி (வயது 46). இவர் செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். மேலும் தென்காசி தெற்கு மாவட்ட திமுகவில் வழக்கறிஞர் பிரிவில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

government-prosecutor-hacked-to-death-by-mysterious-person-in-broad-daylight-in-tenkasi

அரிவாளால் வெட்டினார்

தென்காசி அருகே கூலக்கடை பஜார் செல்லும் பகுதியில் உள்ள காம்ப்ளக்ஸில் முத்துக்குமாரசாமி வழக்கறிஞர் அலுவலகம் தனியாக நடத்தி வருகிறார். இன்று காலையில் வழக்கம் போல் முத்துக்குமாரசாமி தனது அலுவலகத்திற்கு வந்து தனது பணியை தொடங்கிய நிலையில் மர்ம நபர் ஒருவர் முத்துக்குமாரசாமியின் அலுவலகத்திற்குள் புகுந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது இந்த வாக்குவாதம் இருவருக்கும் இடையே கைகலப்பாக மாறிய நிலையில் மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முத்து குமாரசாமியின் தலை, முகம், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த முத்துக்குமாரசாமி உயிருக்கு போராடினார்.

வழக்கறிஞர் உயிரிழப்பு

மர்ம நபர் முத்துக்குமாரசாமியை வெட்டும் போது ஏற்பட்ட அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று பார்த்தனர். அதற்குள் மர்ம நபர் தப்பி ஓடினார். இதையடுத்து அங்கிருந்தவர்கள், தென்காசி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த போலீசார், படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துக்குமாரசாமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சில மணி நேரத்திலேயே முத்துக்குமாரசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

வழக்கறிஞர்கள் போராட்டம்

அரசு வழக்கறிஞர் வெட்டப்பட்ட சம்பவம் அறிந்ததும் தென்காசி பகுதியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திரண்டு தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குற்றவாளி உடனடியாக கைது செய்யப்படுவார் என்று போலீசார் உறுதி அளித்ததையடுத்து, சாலை மறியலை வழக்கறிஞர்கள் கைவிட்டனர். தற்பொழுது கொலை சம்பவம் நடந்த பகுதியை சுற்றிலும் இருக்கும் சிசிடிவி கேமரா உதவியுடன் போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+