பட்டாசு ஆலை விபத்து.. கண்ணிமைக்கும் நேரத்தில் வெடித்துச் சிதறிய பட்டாசுகள்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நெல்லை அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..வீடியோ

    சங்கரன்கோவில்: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள திருவேங்கடம் வரகனூரில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்து விட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மொத்தமாக வெடித்துச் சிதறியதே இந்த பெரும் விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

    how the cracker blast held

    பசுமைப் பட்டாசு விவகாரம் தொடர்பாக இந்த ஆலை மூடப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாகத்தான் இது திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் மொத்தம் 13 அறைகள் உள்ளன. இன்று காலை தொழிலாளர்கள் வேலைக்கு சென்று விட்டு மத்திய உணவு வேலை முடிந்தபின்னர் மீண்டும் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    how the cracker blast held

    அப்போது எதிர்பாராத வண்ணம் ஆலையில் திடீர் என தீப்பற்றி கொண்டதில் தொழிலாளர்கள் யாரும் வெளியேற முடியவில்லை. ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த பட்டாசுகளும் வெடித்து சிதறிவருவதால் கட்டிடங்களும் சேதமடைந்தன.

    தொடர்ந்து பட்டாசு வெடித்து வருவதால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் கட்டிடங்கள் இடிந்து நாசமாயின. இரண்டு வாகனங்கள் சேதமடைந்தன. சம்பவ இடத்திற்கு மருத்துவ குழுவினர் மற்றும் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள், நெல்லைமாவட்ட உயர் அதிகாரிகள் குழு விரைந்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+