பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம்பெறமாட்டோம்... தமிமுன் அன்சாரியின் மஜக தீர்மானம்
நெல்லை: பாரதிய ஜனதா கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Recommended Video
அதிமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி இடம்பெற்றிருந்தது. தற்போது அதிமுக- பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அணியில் பாமக, தேமுதிக, தமாகா ஆகியவையும் இடம்பெறுகிறது.
இந்நிலையில் நெல்லையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழு இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் தமிமுன் அன்சாரி கூறியதாவது: பெரிய அரசியல் கட்சிகள் கூட இன்னும் கூட்டணி குறித்து முடிவு செய்யவில்லை. கூட்டணி குறித்து நிர்வாக குழு கூடி ஆலோசித்து முடிவு செய்வோம்.

பாஜக கூட்டணியில் இல்லை
சமூக நீதிக்கு எதிராக செயல்பட்டு வரும் பாரதிய ஜனதா கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம் பெறப் போவதில்லை என செயற்குழு கூட்டத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கொள்கையும் உழைப்பும் பலன் தராமல் போய்விடக் கூடாது என்ற அடிப்படையில் எங்களது கூட்டணி அமையும்.

சசிகலா உடல்நிலை
சசிகலா பூரண உடல் நலன் பெற்று வீடு திரும்பவேண்டும் என்பதே எங்களது நோக்கம். பொதுமக்களிடமும் சசிகலாவின் உறவினர்களுக்கும் அவரது உடல்நிலை குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.

இலங்கை மீது வழக்கு
இலங்கை கடற்படை தமிழக மீனவர்களுக்கு கடுமையான இன்னல்களை தந்துவருகிறது. மத்திய அரசு, இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு செய்து ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட வேண்டும். தமிழர்கள் பிரச்சனையில் மாற்றாந்தாய் மனப்பான்மையாக மத்திய அரசு நடந்து கொள்கிறது. விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நலனுக்காக மதிமுக அறிவித்துள்ள போராட்டத்திற்கு மனித நேய ஜனநாயக கட்சி முழு ஆதரவு தெரிவிக்கிறது.

கலாம் சொன்ன தீர்வு
தமிழக- இலங்கை மீனவர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறியதைப் போல இருதரப்பும் ஒரு நாள் விட்டு ஒருநாள் மீன்பிடிப்பது என முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு தமிமுன் அன்சாரி கூறினார்.
-
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!












Click it and Unblock the Notifications