அப்பா, அம்மாவுக்கு எதுவும் தெரியாது.. கவினுக்கும் எனக்கும் மட்டுமே தெரியும்.. சுர்ஜித் சகோதரி வீடியோ
நெல்லை: நெல்லையில் கவின் செல்வகணேஷ் ஆணவக்கொலை (Nellai homicide case: Kavin's girlfriend video) சம்பவத்தில் அவரத் தோழி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது தாய் தந்தைக்கு தண்டனை வழங்குவது தவறு.. என் அப்பா, அம்மாவுக்கு எதுவும் தெரியாது, அவர்களை விட்டுவிடுங்கள்.. கவினுக்கும் எனக்கும் என்ன மாதிரியான உறவு என்று எங்களுக்கு மட்டுமே தெரியும்.. உண்மை தெரியாமல் இதைப்பற்றி யாரும் எதுவும் பேச வேண்டாம் என்று கவினின் தோழி சுபாஷினி வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
நெல்லையில் தூத்துக்குடி ஏரல் பகுதியை சேர்ந்த ஐடி என்ஜினீயர் கவின் செல்வகணேஷ் (வயது 28). இவருக்கு பள்ளி படிக்கும் போது, சுபாஷினி மற்றும் அவரது தம்பி சுர்ஜித் பழக்கமானார்கள். சுபாஷினியுடன் கவின் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கவின் கடந்த 27 ஆம் தேதி நெல்லை வந்தபோது சுர்ஜித் தனியாக பேசுமாறு அழைத்துள்ளார்.

பாளையங்கோட்டையில் ஒரு தனியார் மருத்துவமனை முன்பாக மரத்தடியில் நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென சுர்ஜித் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் கவினை வெட்டி கொன்றார். கவின் மற்றும் சுர்ஜித் வெவ்வெறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும், கவின் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதாலேயே இந்த கொலை நடந்ததாக கவினின் பெற்றோர்கள் புகார் கூறினார்.
மேலும் அப்போது இருந்து கவினின் உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்து வருகிறார்கள். இதையடுத்து கைது செய்யப்பட்ட சுர்ஜித் மீது குண்டாஸ் வழக்கு பாய்ந்தது. இதேபோல் சுபாஷினியின் தாய் தந்தையும், போலீ சப் இன்ஸ்பெக்டர்களான சரவணன், கிருஷ்ணகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கபப்பட்டது. இதனை தொடர்ந்து சுபாஷினியின் தந்தை சரவணன் கைது செயப்பட்டார் இந்த நிலையில் தான் கவினின் தோழி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சுபாஷினி அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:- நான் தான் சுபாஷினி.. எனக்கும் கவினுக்கும் என்ன நடந்தது என்று, எனக்கும் அவனுக்கும் மட்டும் தான் தெரியும்.. என்னை பற்றியோ, எங்க இரண்டு பேரை பற்றியோ யாரும் எதுவும் தப்பா பேச வேண்டாம்.. யாருக்கும் எதுவும் தெரியாது.. உண்மை தெரியாம எல்லாரும் நிறையா பேச வேண்டாம்.. எங்க அப்பா அம்மாவுக்கும் இதற்கும் எதுவுமே தெரியாது.. அவங்களை விட்டுங்க.. எங்க அப்பா அம்மாவை தண்டிக்க நினைப்பது தவறு...
இந்த ஒரு நிலைமையில், எல்லாருக்கும் என்ன தோன்றியதோ அதையெல்லாம் பேசிவிட்டீங்க.. நான் என்ன நினைகிறேன் என்பதை மதித்து ஒரே ஒரு பொண்ணு மட்டும் என்ன பத்தி பேசியிருக்காங்க.. அவங்களுக்கு ரொம்ப நன்றி.. இவ்வாறு அந்த பெண் வீடியோவில் கூறியுள்ளார்.
தொடர்ந்து மற்றொரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் சுபாஷினி கூறுகையில், "நானும் கவினும் மனப்பூர்வமாக காதலித்து வந்தோம்.. நாங்க கொஞ்சம் செட்டில் ஆகுறதற்கு டைம் எடுத்தோம்.. இதற்கிடையே எங்க லவ் விஷ்யம் எங்க வீட்டுக்கு தெரிந்தது. எங்க அப்பா என்னிடம் கேட்டாங்க 'என்னம்மா லவ் பண்ட்றியா' என்று கேட்டார். நான் அதற்கு இல்லை என்று கூறினேன்.
இதற்கு மத்தியில் என் தம்பி சுர்ஜித் கவினிடம் பேச வேண்டும் என்று சொன்னான். அவர்கள் இருவரும் பேசினாங்க. இதற்கு பிறகு தான் கவினிடம் பேச வேண்டும் என்றும், பெண் பார்க்க வருமாறும் கவினை சுர்ஜித் அழைத்தான். அப்படி தான் கவின் இங்கு வந்தான். கவின் வந்த பிறகு இருவரும் தனியாக பேசுவதற்காக சென்றார்கள். அப்போது என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஏதேதோ ஆகிவிட்டது.. நடக்க கூடாதது எல்லாம் நடந்துடுச்சு.. என் அப்பா அம்மாவுக்கு இதில் சம்பந்தம் இல்லை. அவர்களை தண்டிப்பது தவறு.. இவ்வாறு வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications