நண்பண் தற்கொலையால் அதிர்ச்சி..துக்கம் தாளாமல் உயிரிழந்த இளைஞர்.. நெல்லையில் அடுத்தடுத்து நடந்த சோகம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை அருகே நண்பர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் அதிர்ச்சியில் துக்கம் தாளாமல் மாரடைப்பால் வாலிபர் ஒருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் செட்டிகுளம் புதுமனை கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுயம்பு. இவரது மகன் தினேஷ் குமார் (வயது 26).

தனது ஊருக்கு அருகே இருக்கும் கூடங்குளம் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக தினேஷ் குமார் பணிபுரிந்து வந்தார்.

காதலியுடன் கருத்து வேறுபாடு

காதலியுடன் கருத்து வேறுபாடு

சமீபத்தில் நடைபெற்ற காவலர் எழுத்து தேர்வில் பங்கேற்று தேர்வும் எழுதியிருக்கிறார். தினேஷ் குமார் தனது ஊர்ப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தினேஷ் குமாருக்கும் அவர் காதலித்த பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காதலித்த பெண்ணுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் சரிவர பேசாமல் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

தூக்குப்போடு தற்கொலை

தூக்குப்போடு தற்கொலை

இதனால், கடும் மன உளைச்சலில் தினேஷ் குமார் இருந்து வந்தாராம். காவலர் தேர்வையும் சரியாக எழுதவில்லை என்ற மன வேதனையில் தினேஷ் குமார் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், மனம் உடைந்த தினேஷ் குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் அவரது குடும்பத்தினருக்கு ஏற்படுத்தியது.

அதிர்ச்சியில் நண்பரும் பலி

அதிர்ச்சியில் நண்பரும் பலி

இதனிடையே, தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டு அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது உறவினர் வெங்கடேஷ்( வயது 33) கடும் மன வேதனை அடைந்துள்ளனர். உறவினர் என்றாலும் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்து வந்திருக்கின்றனர். இதனால், தனது உயிர் நண்பண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவருக்கு கடும் துக்கத்தை அளித்துள்ளது. மனம் தாங்காமல் கதறி அழுத வெங்கடேஷ் திடீரென நெஞ்சு வலி மயங்கி விழுந்தார்.

அடுத்தடுத்த இரு இளைஞர்கள் உயிரிழந்த

அடுத்தடுத்த இரு இளைஞர்கள் உயிரிழந்த

இதைப்பார்த்த குடும்பத்தினர் பதறியடித்துக் கொண்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு வெங்கடேஷை கொண்டு சென்றனர். ஆனால், வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அடுத்தடுத்த இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் செட்டிக்குளம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஜான் பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். ஒரே தெருவில் இரண்டு இளைஞர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+