தென்காசி பேருந்து விபத்து.. தாயை இழந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு பணி! தமிழக அரசு உத்தரவு
தென்காசி: கடந்த 24ம் தேதி தென்காசி கடையநல்லூரில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் மாற்றுத்திறனாளி இளம்பெண்ணின் தாயும் ஒருவர். இந்நிலையில், இளம்பெண்ணுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது.
தூத்துக்குடி கோவில்பட்டியில் இருந்து, தென்காசியின் திருமலை கோயில் நோக்கி தனியார் பேருந்து கடந்த நவம்பர் 24ஆம் தேதி காலை புறப்பட்டது. இதே போல தென்காசியில் இருந்து ராஜபாளையத்தை நோக்கி மற்றொரு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. இரண்டு பேருந்துகளும் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூர் பகுதிக்கு அருகே உள்ள துரைசாமிபுரம் எனும் கிராமத்தில் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கன.

இந்த விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை, வேக கட்டுப்பாட்டை பின்பற்றாமல், அதிவேகத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டது விபத்துக்கு காரணம் என்று கூறியுள்ளது. அதேபோல விபத்து ஏற்படுத்திய பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமாக வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
உயிரிழந்த 8 பேரில், மாற்றுத்திறனாளி இளம் பெண்ணின் தாயும் ஒருவர். இப்பெண்ணின் தந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தாயினுடைய பராமரிப்பில் வாழ்ந்து வந்தார். தற்போது தாய் உயிரிழந்த நிலையில் அவருடைய எதிர்காலம் கேள்விக்குள்ளானது. இது தொடர்பாக செய்தி ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி பணிக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர், மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு விரைவில் வழங்குவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications