Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்று கேஎம்சி.. இன்று தென்காசி.. மின் தடையால் இருளில் மூழ்கிய அரசு மருத்துவமனை.. நோயாளிகள் பரிதவிப்பு

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மின் தடையால் நோயாளிகள் பரிதவிப்புக்கு உள்ளாகினர். நேற்று நள்ளிரவில் மின் தடை ஏற்பட்டதாகவும், நோயாளிகள் அறையில் கூட மின் விளக்குகள், மின் விசிறிகள் இயங்காததால் கடும் அவதியடைந்ததாகவும், இரவு முழுக்க தூங்க முடியாமல் தவித்ததாகவும் கூறியுள்ளனர். ஏற்கனவே கடந்த மாதம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 மணி நேரம் மின் தடையால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகிறார்கள். பலத்த காற்றின் காரணமாக ஒருசில இடங்களில் மின் வயர்கள் அறுந்து விழுவதாலும், மின்கம்பங்கள் சரிந்து விழுவதாலும் இப்படி மின் தடை ஏற்படுவதாக மின் வாரியங்கள் தெரிவித்து வருகின்றன.

tenkasi-government-hospital-plunged-into-darkness-due-to-power-outage-patients-suffer

இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். இதற்கிடையே நெல்லை ஹைகிரவுண்டு மருத்துவமனைக்கு அடுத்தப்படியாக, நெல்லை தென்காசி மாவட்ட மக்கள் அதிகம் பேர் சிகிச்சை பெறும் மருத்துவமனையாக தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட மக்கள் பெரும்பாலானோர் இந்த மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தென்காசி அரசு மருத்துமவனையில் மின் தடை காரணமாக நோயாளிகள் இருளில் அவதிப்பட்டு வருவதாகவும், மின் விசிறி கூட இல்லாமல் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் இருந்தவர்கள் தூங்க கூட முடியாமல் கடும் அவதியடைந்துள்ளனர். நேற்று நள்ளிரவில் மின் தடை ஏற்பட்டதாகவும் அப்போது மருத்துவமனை முழுவதும் இருளில் மூழ்கியதாகவும் நோயாளிகள் தெரிவித்தனர்.

நோயாளி ஒருவர் தனது செல்போனில் இதனை வீடியோவாக எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், மின் தடையால் மருத்துமனை முழுவதும் இருளில் மூழ்கி இருப்பதும், நோயாளிகள் அறையில் கூட லைட்டுகள் எரியாமல், மின்விசிறிகள் இயங்காமல் இருப்பதும், செல்போனில் டார்ச் லைட் அடித்து அந்த வெளிச்சத்தில் இருப்பதும் பதிவாகியிருந்தது.

அப்போது நோயாளிகள் சிலர் அடிக்கடி இப்படி மின் தடை ஏற்படுகிறது என்றும், இரவு முழுக்க தூங்க முடியாமல் அவதியடைந்து வருவதாகவும் கூறுகிறார். மருத்துவமனை வளாகத்தில் கூட வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருக்கும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தது. மேலும் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் மருத்துவமனைகளில் மின் வினியோகம் தடையின்றி கிடைக்க அரசு உடனே ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். முன்னதாக கடந்த மாதம் 22 ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 மணி நேரம் மின் தடை காரணமாக நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி பொது மருத்துவ சிகிச்சை துறை கட்டிடத்தில், கடந்த 22 ஆம் தேதி மாலை திடீரென்று மின் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்தவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சில நோயாளிகள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில நோயாளிகள் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+