Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள்! குறைகளை நிவர்த்தி செய்வது போல தெரியவில்லை! தவெக அஜிதா பேட்டி

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை ராதாபுரம் அருகே கடலில் தூண்டில் வளைவு அமைக்க கோரி அப்பகுதி மீனவ மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் கலந்து கொண்ட தவெக நிர்வாகி அஜிதா, கடந்த 8 ஆண்டுகளாக மனுக்கள் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் தகுந்த நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி தொம்மையார்புரம் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட தவெக நிர்வாகி அஜிதா கூறியதாவது:-

Tvk Administrator Ajitha Accuses Government of Ignoring Fishermen s Demands

மீனவர்கள் போராட்டம்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி தொம்மையார்புரம் பகுதியில் பகல் இரவு போராட்டம் நடந்து வருகிறது. தூண்டில் வளைவு அமைக்கும் வரை இந்த போராட்டமானது தொடரும் என்று கூறி அப்பகுதி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கட்சி சார்ந்து வரவில்லை. கடல் தாயின் மகளாக நான் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறேன். கடந்த 8 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், நிதி அமைச்சர், முதல் அமைச்சர் என பலருக்கும் மனுக்களை இந்த ஊர் மக்கள் அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் இதுவரை இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. இது ரொம்ப வருத்தம் அளிக்கிறது.

வெளியூர்களுக்கு சென்று விட்டார்கள்

தூண்டில், வலை வீசி மீன்பிடித்து மீன்களை ஏற்றுமதி செய்து வாழ்வாதாரத்தை உயர்த்தி வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்று அவர்கள் தங்களது வாழ்வாதறாத்திற்காக குளச்சல், கொச்சி, நாகப்பட்டினத்திற்கு சென்று வாழ வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஏனென்றால், கடற்கரையோரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு, படகுகளை வைத்து மீன் பிடிக்க முடியாத அளவிற்கு அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

தொழில் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கி போயிருப்பதால் அவர்கள் தற்போது வெளி ஊர்களுக்கு செல்ல வேண்டி வந்துள்ளது. இது இவர்களது குழந்தைகளின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது. இப்போது ஆளும் ஆட்சியாளர்களும், முன்னால் ஆண்ட ஆட்சியாளர்களும் இந்த மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்த்து வருகிறார்களே தவிர, இவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

80 ஆண்டுகள் போராடினாலும்..

மூன்று முறை இந்த திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறார்கள். ஆனால் மூன்று முறையும் இது பெயிலியராகத் தான் ஆகியிருக்கு. இதுவரைக்கு அரசியல் சார்ந்த எந்த தலைவர்களும் இங்கு வரவில்லை. ஆனால் வாக்குறுதிகள் மட்டும் தேர்தல் நேரத்தில் கொடுத்து ஏமாற்றி வருகிறார்கள். முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் இவர்களை வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கிறார்கள். குறைகளை நிவர்த்தி செய்வது போல் தெரியவில்லை.

அரசியலில் பிரதிநிதித்துவம் கிடைக்காத வரையில் 8 ஆண்டுகள் அல்ல.. 80 ஆண்டுகள் இந்த மீனவ மக்கள் போராடினாலும் தீர்வு எட்டப்படாது என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன். கண்டிப்பாக வரும் காலங்களில் வெற்றியாக மாற வேண்டும் என்றால், நமக்கான குரல் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு

தமிழகத்தின் மீனவ மாவட்டங்களின் கடற்கரை ஓரம் படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு வசதியாக இருக்கும் 'தூண்டில் வளைவு' எனும் அமைப்பினை உருவாக மீனவர்கள் கோரிக்கை வைத்து வரும் அதே சூழலில், கடலுக்குள் இந்த அமைப்புகளை செயற்கையாக நாம் உருவாக்குவது கடலின் இயற்கையான அமைப்பை பாதிக்கும் என்று இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+