“வாவ்” தமிழ்நாடு அரசு.. ஜெயம் ரவிபோல் படகில் இலங்கை டூர் போகலாம்! நாகையில் ரியல் பொன்னியின் செல்வன்
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனாக நடித்து இருக்கும் ஜெயம் ரவி இலங்கைக்கு படகில் செல்வதைபோல் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு படகு சவாரி தொடங்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கி உள்ளது.
குஜராத்தில் நடைபெற்ற கடலோர மாநிலங்கள் மேம்பாட்டுக் குழுமக் கூட்டத்தில் மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "தீபகற்ப இந்தியா, குறிப்பாக பண்டைய தமிழ்நாடு, தென்கிழக்கு ஆசியா, இலங்கை மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக இணைப்பில், ஒரு முக்கிய மையமாக விளங்கியது.

கொற்கை, குலசேகரப்பட்டினம், காயல்பட்டினம், அழகன்குளம், தேவிப்பட்டினம், நாகப்பட்டினம், பூம்புகார், கடலூர், அரிக்கமேடு, மரக்காணம், மாமல்லபுரம், பழவேற்காடு போன்ற பழங்காலத் தமிழகத்தின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுகங்கள் மற்றும் கோரமண்டல கடற்கரையில் உள்ள பல துறைமுகங்கள், தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் கலாச்சார வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றிக்கொண்டிருந்தன.
திரு.வ.உ.சிதம்பரனார் அவர்கள் 1906-இல், பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் வ நிறுவனத்துடன் போட்டியிட சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை நிறுவினார். கடல்சார் மற்றும் துறைமுகத் துறையில் முன்னோடியாக இருக்கும் இந்த பாரம்பரியத்தை தொடரவும். இந்தியாவை தற்சார்புடைய நாடாக மாற்றவும், தமிழ்நாடு சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும்.
தமிழ்நாடு கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் நுழைவாயிலுடன் கூடிய தனித்துவமான கடற்கரையைக் கொண்டுள்ளது. அதன் கடல்சார் மற்றும் துறைமுகத் துறையை வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள துறைமுகங்களை மேம்படுத்துவதில் ஒரு செயலூக்கமான மற்றும் தாராளமான அணுகுமுறையை கொண்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் சாகர்மாலா திட்டத்தின் கீழ், மானியமாக தமிழ்நாடு கடல்சார் வாரியத்திற்கு சுமார் ரூ.120 கோடி நிதியுதவி அளித்த மத்திய அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் இந்திய அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவை சர்வதேச அளவில் இணைக்கும் வகையில் இலங்கைக்கு துவங்கவுள்ள முதன்மையான படகுச் சேவைக்கு வெளியுறவு அமைச்சகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
முன்னெடுக்கப்பட்டுள்ள சர்வதேச பயணிகள் படகு சேவையானது நீண்டகாலமாக பகிரப்பட்ட வரலாறு மற்றும் ஆழமான கலாச்சார உறவுகளைக் கொண்ட இவ்விரு நாடுகளுக்கும் பயனளிக்கும். இது நாடுகளுக்கிடையே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வர்த்தகத்தையும் மேம்படுத்தும்.
கூடிய விரைவில் பலன் கிடைக்கும் வகையில், இப்படகு சேவையை விரைவில் தொடங்குவதற்கு நாகப்பட்டினம் துறைமுகம் தயாராகி வருகிறது. இராமமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே படகு சேவையை புதுப்பிப்பதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப் பட்டுள்ளதுடன், அதற்கான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
1980 ஆம் ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருந்த இந்தியாவுக்கும். இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய கடல்வழிகளை புதுப்பிக்கும் வகையில் இத்திட்டம் இருக்கும் என தெரிவித்தார்கள். கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவது என்பது பற்றிய ஒருங்கிணைந்த முடிவுகளுக்காக, ஆற்றல், தொழிற்துறை மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட கடலின் பல பங்காளர்களை ஒன்றிணைக்கும் கடல் இடஞ்சார்ந்த திட்டமிடலில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது.
கடலோர கடல் வளங்களை பாதுகாப்பது நமது பொறுப்பும், கடமையும் ஆகும். அதன் நீண்ட கடற்கரையை பயன்படுத்தி கடலோர சுற்றுலா. பொழுதுபோக்கு கடல்நீர் விளையாட்டுகளை வழங்குவதன் மூலம் நீல பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான ஆய்வுகளையும் மேற்கொண்டு வருவதாக கூறினார்கள்." என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications