வட சென்னையின் மறுபக்கம்..சுற்றிபார்க்க இவ்வளவு விசயங்கள் இருக்கா? வண்ணாரப்பேட்டை டூ சவுக்கார்பேட்டை
சென்னை: வன்முறை களமாக மட்டுமே சினிமாக்களில் சித்தரிக்கப்படும் பூர்வகுடி சென்னை மக்கள் வசிக்கும் வட சென்னையில் சுற்றுப்பார்ப்பதற்கு பல இடங்கள் உள்ளன. அவை என்ன? அங்கு என்ன சிறப்புகள் உள்ளன? என்பதை விரிவாக பார்ப்போம்.
இன்று சென்னையை கதைக்களமாக கொண்டு தயாராகும் பெரும்பாலான படங்களில் வட சென்னையை வில்லன்களின் கூடாரமாக, ரவுடியிசம், கடத்தல், போதைப் பொருட்கள் பதுக்கும் இடமாகவே காட்சிபடுத்தப்பட்டு வருகிறது. இதனால் சென்னை மொழியை பேசி வரும் அதன் பூர்வக்குடி மக்கள் அனைவரையுமே வெளியுலகம் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் துயரம் தொடர்கிறது. ஆனால், வட சென்னை பல அழகியல்களையும், கொண்டாட்டங்களையும், விளையாட்டுக்களையும், கலைகளை கொண்டு உள்ளது. இப்படிப்பட்ட வட சென்னையில் நாம் சுற்றிப் பார்ப்பதற்கும் ஏராளமான அழகிய வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் உள்ளன.

1. பழவேற்காடு ஏரி மற்றும் பறவைகள் சரணாலயம்: தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேச எல்லை பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இது அமைந்து இருக்கிறது. பல ஆயிரக்கணக்கான அழகிய உள்நாட்டு பறவைகள் மற்றும் வெளிநாட்டு பறவைகளை பார்த்து ரசிக்க இது அருமையான இடம். அதேபோன்று படகு சவாரி செய்தும் மகிழலாம். நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இங்கு சென்றால் சிறப்பாக இருக்கும்.
2. கொல்ரியா கோட்டை: டட்சுக்காரர்களின் கிழக்கு இந்திய நிறுவனத்தால் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோட்டை இது. இந்தியாவை வெள்ளையர்கள் கைப்பற்றியபோது ஆரம்ப காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. மேற்கண்ட பழவேற்காடு ஏரி மற்றும் பறவைகள் சரணாலயத்திற்கு அருகிலேயே இது அமைந்து இருக்கிறது.
3. சவுக்கார்பேட்டை: வட சென்னையின் மிக முக்கிய பகுதிகளில் ஒன்று சவுக்கார்பேட்டை. குட்டி குஜராஜ், ராஜஸ்தானுக்கு சென்று வந்த உணர்வை உங்களுக்கு இப்பகுதி ஏற்படுத்தும். ஜெயின் கோயில்கள், வட இந்திய முறைப்படி ஆடை அணிந்து செல்லும் மக்கள், வட இந்திய உணவான தால், சப்பாத்தி, பாணி பூரி என முழுக்க முழுக்க வட இந்திய பிளேவரை வட சென்னையின் இப்பகுதியில் காணலாம். வட இந்தியாவில் கிடைக்கும் அனைத்து வகையான சாட் உணவுகளையும் இங்கு சுவைத்து மகிழலாம்.
4. ராயபுரம்: ராயபுரம் என்றாலே ரவுடிகளின் கூடாரம் என்ற தோற்றம் நிலவுகிறது. ஆனால் மீனவர்கள் அதிகளவில் வசிக்கும் இப்பகுதியில் கிடைக்காத மீன்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு வங்கக்கடல் மீன்களின் சரணாலயமாக ராயபுரம் திகழ்கிறது. இங்கு கப்பல், படகுகள் பழுதுபார்க்கும் பணிகள், ஃபிரெஷான மீன்கள், இறால், நண்டுகளை பார்த்து ரசிக்கலாம். வாங்கியும் சுவைக்கலாம்.
5. பழைய வண்ணாரப்பேட்டை: சென்னையில் ஆடைகளின் சங்கமம் என்று பழைய வண்ணாரப்பேட்டையை அழைக்கலாம். தமிழ்நாடு முதல் தாய்லாந்து வரை அனைத்து வகை ஆடைகளும் இங்கு கிடைக்கும். அதேபோன்று வட இந்திய ஆடைகளும், குறைந்த விலையில் ஆண்கள் பெண்களுக்கான உடைகளும் இங்கு கிடைக்கும். இங்கு கிடைக்கும் அத்தோ, பேஜோ உணவுகள் மிகவும் பிரபலம்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications