திருநெல்வேலி கிளம்பறீங்களா.. தித்திக்கும் இருட்டுக்கடை அல்வா.. அதைவிடுங்க.. இதான் சீக்ரெட்.. பாருங்க
சென்னை: அதென்ன திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா? இந்த பெயர் எப்படி வந்தது? இந்த இருட்டுக்கடை அல்வாவுக்கு மட்டும் எப்படி தனிச்சுவை இருக்கிறது? நம்மாலும் இந்த அல்வாவை செய்ய முடியுமா?
இருட்டு நேரத்தில் கிடைக்கும் அல்வா என்பதால் மக்களால் இருட்டுகடை அல்வா என்று அழைக்கப்பட்டு நாளடைவில் அதுவே கடையின் நிரந்தர அடையாளமாக மாறிவிட்டது என்கிறார்கள்.

இந்த கடை ஆரம்பிக்கப்பட்ட நாளில் ஒரே ஒரு எண்ணெய் விளக்கு மட்டுமே இருந்திருக்கிறது. சாயங்கால நேரத்தில் தான் இது திறக்கப்படுவது வழக்கம் என்பதால், இருட்டாய் இருக்கும் கடை என்பதே காலப்போக்கில் மாறி 'இருட்டுக்கடை' என்றாகிவிட்டது.
சிறிய பல்ப் ஒளி: மிகப்பெரிய விளம்பரமோ, அதற்கான பெயர்ப்பலகையோ, வண்ண வண்ண விளக்குகளோ, அலங்காரங்கள் எதுவுமே இல்லாமல், ஆரவாரமுமின்றி, சிறிய பல்ப் ஒளியில் தான் அல்வா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்போது எண்ணெய் விளக்குக்கு பதில் சாதாரண மின்விளக்கை மட்டுமே பயன் படுத்துகிறார்கள்.
1940-க்கு முன்பு வரை திருநெல்வேலி என்றால் நெல்லையப்பர் கோயில்தான் அடையாளமாக இருந்து வந்தது. அதன் பிறகு திருநெல்வேலிக்கு இருட்டுக்கடை அல்வாவும் ஒரு இனிப்பான அடையாளமாகிவிட்டது..
1940-களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவரால் துவங்கப்பட்டு இப்போது அவருடைய 3ம் தலைமுறை வாரிசுகளால் நடத்தப்படுகிறது இந்த அல்வா கடை.. நெல்லையை சேர்ந்த சொக்கம்பட்டி ஜமீன்தார் வடமாநிலத்திற்கு யாத்திரை சென்றாராம்.. அங்கு ஒரு குடும்பத்தில் செய்த அல்வாவை சாப்பிட்டு பார்த்து, அந்த சுவையில் மயங்கியேவிட்டாராம்.. அந்த குடும்பத்தை, ராஜஸ்தானில் இருந்து, கையோடு திருநெல்வேலிக்கு அழைத்து வந்துவிட்டாராம்.. அவர்கள்தான், இந்த இருட்டுக்கடை அல்வா ஓனர்கள் என்கிறார்கள்.
ஆனால், ராஜஸ்தானைச் சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் பிழைப்புக்காக, தமிழகம் வந்ததாகவும், அவர்களின் வாரிசுகள்தான் இருட்டுக்கடை அல்வா கடையினை நடத்தி வருவதாகவும் சொல்கிறார்கள்.. இந்த பிஜிலி சிங் தான் ஜமீன்தார் அழைத்து வந்த நபர் என்றும் கூறப்படுகிறது. எனினும், இன்றுவரை மண்மணம் மாறாமல் உள்ளதென்றால் அதற்கு முக்கிய காரணம், அதன் சுவைதான்..
தாமிரபரணி தண்ணீர்: இந்த இருட்டுக்கடை அல்வா தயாரிப்பிற்காக அவர்கள் பயன்படுத்தும் கோதுமையினை, கையாலேயே அரைக்கிறார்களாம். மிஷின் பயன்படுத்துவதில்லையாம்.. இந்த மாவில், தாமிரபரணி தண்ணீர் கலந்து செய்யும்போது, மெருகேற்றம் அடைந்து, இப்படியான சுவையை தருகிறதாம். இன்றுவரை மாலை நேரத்தில் கூட்டம் இங்கு அலை மோதுகிறது.
அதிலும், உள்ளூர்க்காரர்கள், இந்த கடை வாசலில் நின்றுகொண்டு, 100 கிராம் அல்வாவை சுடச்சுட வாங்கி, ஓரமாக நின்று ருசித்து சாப்பிட்டு விட்டு, இலவச மிக்சரையும் பெற்றுக்கொள்கிறார்கள்.. அத்துடன் தங்கள் வீட்டுக்கும் வாங்கி செல்கிறார்கள்.. இந்த திருநெல்வேலியில், அப்பம், அதிரசம், முந்திரிக்கொத்து, இலையப்பம், பாயாச வகைகள் இப்படி பல்வேறு வகையான இனிப்புகள் கிடைத்தாலும், அனைத்தையும் வென்றுவிடுகிறது இந்த இருட்டுக்கடை அல்வா.

நம் வீடுகளில் செய்யலாமா?: இதை நம் வீடுகளிலும் செய்து பார்க்கலாம் என்றாலும், இந்த கடையின் சுவை கிடைக்காது என்பதே உண்மை.. எனினும் முயற்சித்து பார்க்கலாம்.
கோதுமை மாவு - 2 கப்
நெய் - 200 மி.லி
சர்க்கரை - 4 ½ கப்
வறுத்த முந்திரி - 20
செய்முறை: ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளவும். மாவை சாஃப்டாக பிசைந்த பின்பு அதில் 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி இந்த கலவையை 6 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, மாவை கையால் எடுத்து நன்கு அழுத்தி நீரில் அப்படியே கரைத்து விடவும். ஊற வைத்துள்ள தண்ணீரில் மாவு முழுவதும் கரைந்த பின்பு அதை வடிக்கட்டி பாலை மட்டும் தனியாக பிரித்து எடுத்துவிடவும். இந்த பாலை பாத்திரத்தில் ஊற்றி இரவு முழுவதும் மூடி வைக்கவும்.
மறுநாள் காலையில் பாத்திரத்தைத் திறந்து பார்க்கும்போது பால் புளித்து, மேலே ஏடு மிதக்கும். அதை மட்டும் கரண்டியால் நீக்கிவிட்டு பாலை வடிக்கட்டிவிட்டால், அல்வா செய்வதற்கான திக்கான பால் தயாராகிவிடும்... கடாயை அடுப்பில் வைத்து, அதில் வடித்து வைத்திருக்கும் பாலை ஊற்றி, 15 நிமிடத்திற்கு அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.. பாலை கைவிடாமல் கரண்டியால் தொடர்ந்து கிளறிகொண்டே இருந்தால், அல்வா உருண்டு திரண்டு வரும்.. பிறகு 3 கப் சர்க்கரையை சேர்த்து கரையும் வரை கிளற வேண்டும்..

இரண்டும் கலந்து அல்வா பதத்திற்கு வந்தபின்பு கடாயை இறக்கி வைக்கவும். திருநெல்வேலி அல்வா செய்முறையில் சர்க்கரை பாகு தயார் செய்வது மிக மிக முக்கியம். அல்வாவுக்கு நிறத்தைக் கொடுப்பதே சர்க்கரை பாகு தான்.
செய்முறை: அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 5 ஸ்பூன் சர்க்கரையை சேர்க்கவும். மிதமான தீயில் சமைக்கவும். சூட்டில் சர்க்கரை கரைந்து பாகு போல் உருகி வரும். கெட்டி பதம் தட்டாமல் இருக விடாமல் கிளறவும். தண்ணீர் சேர்க்காமல் தயாரிக்கப்படும் இந்த சர்க்கரை பாகு நிறம் மாறிக்கொதிக்க தொடங்கியதும் இறக்கி விடவும். திருநெல்வேலி அல்வா இப்போது மாவு இருக்கும் கடாயை மறுபடியும் அடுப்பில் வைத்து அதில் கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரை பாகு சேர்த்து கிளறவும். வெள்ளையாக இருக்கும் மாவு நிறம் மாறி அல்வா நிறத்திற்கு வரும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும். இப்போது நெய்யை ஊற்றவும். கரண்டியால் அல்வாவை கிளறி கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக நெய்யை சேர்க்கவும். இறுதியாக வறுத்த முந்திரியை சேர்த்து இறக்கினால் போதும். அல்வா தயாரானதும் அதை கையால் தொட்டு பார்க்க வேண்டும், கையில் ஒட்டாமல் வந்தால் சரியான பதம் என அர்த்தம். இப்போது திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா ரெடி...!!
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications