Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த 8 இடங்கள்.. டூர் போக பிளான் பண்ணியிருந்தா உடனே முடிவை மாற்றிடுங்க.. ரொம்பவே டேஞ்சர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்போதைய சூழலில் இந்தியாவில் மிகவும் ரிஸ்க் நிறைந்த சுற்றுலா பகுதிகள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம். இந்த இடங்களுக்கு எல்லாம் சுற்றுலாப் பயணம் செய்ய பிளான் போட்டு இருந்தால் உடனே முடிவை மறுபரீசிலனை செய்யுங்கள். லிஸ்டில் இருக்கும் இடங்கள் எதெல்லாம் என்பது பற்றி இங்கே பார்ப்போம்.

விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் ஜாலியாக டூர் செல்ல பலரும் விரும்புவார்கள். வசதி படைத்தவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டு இருப்பார்கள். நடுத்தர வசதி கொண்ட மக்கள் அருகில் உள்ள மாநிலங்களில் இருக்கும் சிறந்த சுற்றுலாத்தலங்களுக்கும் தங்கள் ஊருக்கு அருகிலேயே இருக்கும் சுற்றுலா தலங்களுக்கும் விசிட் அடிப்பது வழக்கம்..

tour travel meghalaya

எனினும், தற்போது நாடு முழுக்க மழை வெளுத்துக் கொண்டு இருப்பதால் சில இடங்களுக்கு டூர் செல்வதை சுற்றுலாப் பயணிகள் தவிர்ப்பது அவசியம். ஏனெனில் திடீரென ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் கனமழை வெள்ளம், என சுற்றுலா பயணிகள் நடு வழியில் சிக்கி கொள்ளும் அபாயம் உள்ளது.

எனவே, தற்போதைய சூழலில் இந்தியாவில் மிகவும் ரிஸ்க் நிறைந்த சுற்றுலா பகுதிகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த இடங்களுக்கு எல்லாம் பயணம் செய்ய பிளான் போட்டு இருந்தால் உடனே முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள். லிஸ்டில் இருக்கும் இடங்கள் எதெல்லாம் என்பது பற்றி இங்கே பார்ப்போம்.

கேரளா: கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் பகுதி கேரளா. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை கொண்ட இடமாக இருக்கும் கேரளா, இந்தியாவின் டாப் டூரிஸ்ட் ஸ்பாட்களில் ஒன்றாக இருக்கும். தமிழகத்தின் அண்டை மாநிலம் என்பதால், தமிழ்நாட்டில் இருந்து வீக் எண்டில் கூட கேரளாவிற்கு சுற்றுலாப் பயணிகள் சென்று விட்டு வருவதை பார்க்க முடியும். ஆனால் தற்போது அங்கு பருவமழை என்பதால், சுற்றுலா பயணிகள் அங்கு செல்வது கொஞ்சம் ரிஸ்க்தான்.

tour travel meghalaya

ஏனெனில், மூணாறு, வயநாடு போன்ற மலைப்பகுதிகளில் அடிக்கடி கனமழை பெய்து சாலைகள் மூடப்படுகின்றன. சீதோஷ்ண நிலையால் எப்போது கனமழை பெய்யும் என்று கணிக்க முடியாது. இதனால் சுற்றுலா பயணிகள் தாங்கள் விரும்பிய இடத்திற்கு திட்டமிட்டபடி போவதில் சிரமம் இருக்கும். இதானால், தற்போதைக்கு கேரளா விசிட் செய்ய திட்டமிட்டு இருந்தால் அதை ஒத்திவைப்பதே பெஸ்ட்.

மகாராஷ்டிரா: தென்மேற்கு பருவமழை கடைசி கட்டத்தில் உள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவின் கடலோர பகுதிகளில் மிக மிக கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய இடங்களில் தண்ணீர் அதிக இடங்களில் தேங்கி நிற்கிறது. அடிக்கடி வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்படும் அபாயம் இருப்பதால், இந்தபகுதிகளுக்கு சென்றால் தேவையில்லாமல் டிராஃபிக்கில் சிக்கி கொள்ள வேண்டியிருக்கும்.

tour travel meghalaya

அசாம்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று அசாம். வடகிழக்கு மாநிலங்களுக்கே உரிய தனித்துவமான இயற்கை அழகை கொண்டது. ஆனால் தற்போது அங்கு கனமழையால் அதிக இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பிரம்மபுத்திரா ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பொதுவாக மழைக்காலங்களில் அசாமில் சாலை வழி பயணமும் ரயில் பயணமும் கொஞ்சம் ரிஸ்க் நிறைந்ததுதான். கனமழை காரணமாக அசாம் காசிரங்கா பூங்கா மற்றும் மனாஸ் பூங்காவும் மூடப்பட்டுள்ளன.

tour travel meghalaya

மேகாலயா: உலக அளவில் அதிகம் மழைப்பொழிவை பெறும் இடங்களில் ஒன்றாக மேகாலயா உள்ளது. சிரபுஞ்சி மற்றும் மௌசின்ரம் ஆகிய இடங்களுக்கு பருவ மழை காலத்தில் மிகவும் ஆபத்தானது. மழைக்காலங்களில் போக்குவரத்து தடைபடும். எனவே மழைக்காலங்களில் இந்த பகுதிகளுக்கு நீங்கள் சுற்றுலா சென்றால், நடு வழியில் சிக்கி கொள்ளும் அபாயம் அதிகம் இருக்கிறது.

tour travel meghalaya

பீகார்: பீகாரின் வடக்கு பகுதிகள் மழைக்காலங்களில் கொஞ்சம் அபாயம் நிறைந்தவை. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது, கரையோரங்கள் வெள்ளத்தில் மூழ்குவது என அடிக்கடி நடைபெறுகிறது. அடிக்கடி சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மழைக்காலத்தில் பயணம் செய்வதை தவிர்ப்பதே நல்லதாம்.

tour travel meghalaya

உத்தரகாண்ட்: இமயமலை அடிவாரத்தில் அமைந்து இருக்கும் உத்தரகாண்டில் அடிக்கடி, நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவை மழைக்காலத்தில் ஏற்படுகிறது. கேதர்நாத், பத்ரிநாத் போன்ற ஆன்மிக பகுதிகளுக்கு செல்லும் பாதையும் அடிக்கடி நிலச்சரிவால் மூடப்படும். இதனால், இந்த பகுதிகளுக்கு மழைக்காலத்தில் விசிட் செய்வது துணிகரமான பயணமாகவே கருதப்படுகிறது.

tour travel meghalaya

மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தின் வடக்கு மலைப்பகுதிகளான டார்ஜிலிங், கலிம்போங் ஆகிய இடங்களில் மழைக்காலங்களில் அடிக்கடி நிலசரிவு ஏற்படும். தீஸ்தா ஆறும் அபாய அளவில் ஓடும். இந்த ஆற்று பகுதிகளுக்கு செல்வதும் ஆபத்தானது. சமவெளி இடங்களான கொல்கத்தாவில் கூட மழைக்காலத்தில் அடிக்கடி வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.

tour travel meghalaya

நாகாலாந்து: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தும் அங்குள்ள கலாசாரம், இயற்கை சூழல் ஆகியவற்றால் சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரசித்தி பெற்றது. ஆல் இந்தியா டூர் அடிப்பவர்களின் பயண லிஸ்டில் நாகாலாந்தும் இருக்கும். ஆனால் மழைக்காலங்களில் திம்பூர்- கோஹிமா ஆகிய பகுதிகளில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும். இதனால், இந்த இடங்களுக்கு எல்லாம் மழைக்காலத்தில் செல்வது ரிஸ்க் நிறைந்ததுதான்.

tour travel meghalaya
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+