கொடைக்கானல் தனியார் சொகுசு பங்களாவுக்கு தேடி வந்த விருந்தாளிகள்.. கடைசியில் செம்ம ட்விஸ்ட்
கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் சொகுசு பங்களாவுக்குள் காட்டெருமைகள் கூட்டமாக புகுந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர், உடனே வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, காட்டெருமைகளை பட்டாசு வெடித்து விரட்டினார்கள்.
இந்தியாவின் புகழ்பெற்ற கோடைவாசல் தளங்களில் ஒன்றான கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையில் பசுமை பாலைவனமாக அற்புதமான காட்டுப்பகுதியாகும். பசுமை பாலைவனம் என்று அழைக்கப்படும் தேயிலை தோட்டங்கள் இல்லாத பகுதியாக கொடைக்கானல் இருக்கிறது. கொடைக்கானல் வனப்பகுதி என்பது எளிதில் யாரும் நுழைய முடியாத அளவிற்கு மிகுந்த அடர்ந்த வனப்பகுதியாகும்.

இயற்கை இன்னமும் அப்படியே இருக்கும் இடமாக கொடைக்கானல் வனப்பகுதி இருக்கிறது. கொடைக்கானல் நகர் தொடங்கி கீழே பெரிய குளம் வரை முற்றிலும் விவசாய தோட்டங்களாகவே இருக்கும்.. அதேநேரம் கொடைக்கானல் முதல் வத்தலக்குண்டு செல்லும் பிரதான சாலைப்பகுதியில் வனப்பகுதிகளே மிக அதிகமாக இருக்கும்.
கொடைக்கானல் மலைப்பகுதியை பொறுத்தவரை காட்டெருமை, காட்டுப்பன்றி, காட்டு யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. இதில், காட்டெருமைகள் அவ்வப்போது கொடைக்கானல் நகருக்குள்ளேயே சர்வ சாதாரணமாக உலா வந்து பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சுறுத்துவது வாடிக்கை. சில நேரம் வாகனங்களை தாக்குவதுடன், விளைநிலங்களில் பயிர்களை நாசம் செய்யும்.
காட்டுயானைகளை பொறுத்தவரை கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளில் அதிகமாக இருக்கும். மேல்மலை பகுதிகளில் கிளாவரை பகுதியில் தான் அதிகம் இருக்கும். இந்தநிலையில் கொடைக்கானல் வனத்துறை அலுவலகம் அருகே பர்ன்ஹில் சாலையில் உள்ள ஒரு தனியார் சொகுசு பங்களா வளாகத்துக்குள் நேற்று காலை 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக புகுந்தன. பங்களா வளாகத்திலேயே முகாமிட்ட காட்டெருமைகள், அப்பகுதியை சுற்றியே உலா வந்தன.
ஒரு கட்டத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் சூழ்ந்து கொண்ட காட்டெருமைகள் அச்சறுத்தும் வகையில் சுற்றின. இதனை பார்த்த பங்களா ஊழியர்கள், அதன் உரிமையாளரிடம் தெரிவித்தனர். அவர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனச்சரகர் சிவக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் காட்டெருமைகளை பட்டாசு வெடித்து விரட்டினார்கள்.
ஆனால் சிறிது நேரத்திலேயே மீண்டும் சொகுசு பங்களா பகுதிக்குள் காட்டெருமைகள் புகுந்தன. பின்னர் மீண்டும் வனத்துறையினர் வந்து, காட்டெருமைகளை அங்கிருந்து தனியார் தோட்ட பகுதிகள் வழியாக வனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர். கடந்த சில நாட்களாகவே நகர் பகுதிக்குள் காட்டெருமைகள் அடிக்கடி புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications