சென்னை எம்ஆர்சி நகர் நட்சத்திர விடுதியில் காதலியுடன் தங்கிய இளைஞர்.. ஆடையே இல்லாமல் 'அய்யோ சீ'!
சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை அடுத்த எம்ஆர்சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் காதலியுடன் தங்கிய இளைஞர், போதை தலைக்கேறி, நிர்வாணமாக ஓட்டலில் சுற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை ஓட்டல் ஊழியர்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை அடுத்த எம்.ஆர்.சி.நகரில் கடற்கரையை ஒட்டி மிகப்பெரிய தனியார் நட்சத்திர ஓட்டல் இருக்கிறது. சென்னையில் மிகவும் புகழ் பெற்ற இந்த நட்சத்திர ஓட்டலில் தான் பல விஐபிக்கள் வந்து தங்கி செல்வார்கள்.

சென்னைக்கு வரும் பல்வேறு சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து அறை எடுத்து தங்குவார்கள். அப்படித்தான் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது காதலியுடன் இரண்டு நாட்களாக அறை எடுத்து தங்கினார்.
நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த அவர், அங்கு மது அருந்தி உற்சாகமாக இருந்துள்ளார். காதலி அறையில் அமர்ந்துள்ளார். ஆனால் அவர் மட்டும் திடீரென அறையை விட்டு வெளியே வந்தார். உடலில் ஒட்டு துணிகூட இல்லாமல் , நிர்வாணமாக ஓட்டல் வளாகத்துக்குள் போதை தலைக்கேறிய படி சுற்றினார்.
ஓட்டலில் இருந்த மற்ற அறைகளுக்குள் அத்து மீறி புகுந்த அவர் அங்கிருந்த பெண்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் முன்னால் ஆடையே இல்லாமல் கூச்சமின்றி நின்றார். ஓட்டலில் தங்கியிருந்த பெண்கள் "அய்யோ... இது என்ன கொடுமை" என்று கூறிய படியே அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.
இதுகுறித்து ஓட்டல் ஊழியர்களுக்கு சுற்றுலா பயணிகள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ஓட்டல் நிர்வாகத்தினர் மற்றும் ஓட்டலில் தங்கி இருந்த மற்ற ஆண்கள் போதையில் ஆடை இல்லாமல் சுற்றிய இளைஞரை மடக்கி பிடிக்க முயன்றார்கள். ஆனால் அந்த இளைஞரோ போதை தலைக்கேறிய நிலையில் என்ன நடக்கிறது? என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்ல
யாருடைய கட்டுப்பாட்டுக்குள்ளும் வராமல் சுற்றிய இளைஞரை ஓட்டலில் இருந்த சுற்றுலா பயணிகள் மடக்கி பிடித்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஓட்டலுக்கு போலீசாரும் விரைந்து சென்றனர். அவர்களிடம் நிர்வாண போதை வாலிபர் ஒப்படைக்கப்பட்டார். அவரை விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றார்கள்
போலீஸ் விசாரணையில் போதை வாலிபர் சென்னை ஓ.எம்.ஆர். பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் என்பது தெரிய வந்தது. காதலியுடன் 2 நாட்களுக்கும் மேலாக நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கியிருந்ததும் தெரியிவந்தது. சனிக்கிழமை இரவு மதுகுடித்து காதலியுடன் உல்லாசமாக இருந்த வாலிபர் உச்சக்கட்ட போதையில் அப்படியே வெளியில் வந்ததும் தெரியவந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்












Click it and Unblock the Notifications