திண்டுக்கல்லில் சம்பவம் இருக்கு.. இரவு 10 மணிவரை கொட்டப்போகும் மழை.. எச்சரித்த வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. எனவே தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், இரவு 10 மணி வரை திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி இன்று காலை முதல் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்து. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது வரை 39.2 செ.மீ அளவுக்கு மழை கொட்டி தீர்த்திருக்கிறது.

12 districts including Dindigul are likely to experience moderate rain in the next 2 hours

பொதுவாக ஒரு பகுதியில் 24 மணி நேரத்திற்குள் 20.45 செ.மீக்கு அதிகமாக மழை பெய்யும் எனில் அந்த பகுதிக்கு ரெட் அலர்ட் விடப்படுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் மிக அதிக கனமழை பெய்திருக்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. பேகம்பூர் பள்ளிவாசல் தெரு, பக்தவச்சலம் நகர், ஒத்தக்கண் பாலம், கக்கன் நகர், கோவிந்தசாமி நகர், லிங்கையர் சந்து ஆகிய பகுதிகளில் மழை நீர் இன்னும் முழுமையாக வடியவில்லை.

வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆட்சியர் பூங்கொடி நேரில் பார்வையிட்டுள்ளார். மேலும் மாவட்டத்தில் உள்ள 6 அணைகளில், பொருந்தலாறு, வருதமாநதி, குதிரையாறு என 3 அணைகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன. மற்ற அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில்,

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

இது தவிர அடுத்த 2 மணி நேரத்தில், அதாவது இரவு 10 மணி வரை திண்டுக்கல் உட்பட 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது. அதாவது, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று கூறியுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+