19 மாவட்டங்களில் இடி - மின்னலுடன் மழை.. காலை 10 மணி வரை அலர்ட் தந்த வானிலை மையம்.. உங்கள் ஊர் இருக்கா?
சென்னை: தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்று காலை 10 மணி வரை பல இடங்களில் மழைபெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு மழை என்பது பெய்து வருகிறது. இப்போது வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்று காணப்படுகிறது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதுதான் பல பகுதிகளிலும் இன்று மழையை கொடுத்து வருகிறது.

தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதகிளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரி இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காலையில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது.
இதற்கிடையே தான் இன்று காலை 7 மணிக்கு அடுத்த 3 மணிநேரம் தொடர்பான வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை வெளியிட்டது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த இடங்களில் லேசான இடி மின்னலுடன் மழை பெய்யலாம்.
அதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலும் இன்று காலை 10 மணி வரை லேசான இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழையின் காரணமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கலாம். சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதற்கிடையே தான் நேற்று இரவு முதல் தென்காசி மாவட்டத்தின் பல இடங்களில் மழை என்பது தொடர்ந்து வருகிறது. இதனால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் இன்று மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications