புழல் ஏரியில் புயல் வேகத்தில் நிரம்பும் நீர்.. 2,000 கன அடி நீர் திறப்பு! கரையோர மக்களுக்கு அலர்ட்
சென்னை: கனமழை காரணமாக புழல் ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் 2,000 கன அடி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ள மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையை ஒட்டி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள முக்கிய குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், பூண்டியில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

புழல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அதன் நீர் வரத்து தற்போது 400 கனஅடியாக அதிகரித்து இருக்கிறது. ஏரியின் முழு கொள்ளளவான கொண்ட 3,300 மில்லியன் கன அடியில் தற்போது 3,074 மில்லியன் அடி நீர் இருப்பு உள்ளது. மொத்தம் 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் வேகமாக தண்ணீர் நிரம்பி 20.34 அடியை தொட்டு உள்ளது. வேகமாக தண்ணீர் நிரம்பி புழல் ஏரியின் முழு கொள்ளளவை நெருங்கி வருவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஏரியில் நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக நேற்று 100 கன அடி நீர் திறக்கப்பட்டது. அது படிபடியாக 500 கன அடி, 1000 கன அடி என்று இன்று காலை அதிகரிக்கப்பட்டது. ஆயினும் நேற்று முதல் கொட்டித் தீர்த்த பெரு மழையின் தாக்கம் காரணமாக புழல் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் தற்போது பாதுகாப்பு கருதி நீர் திறப்பு அளவு 2,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. புழல் ஏரியில் 2000 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் அதன் கரையோர பகுதிளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக புழல் ஏரியிலிருந்து உபரி நீா் வெளியேறும் வாய்க்கால் செல்லும் பகுதிகளான மஞ்சம்பாக்கம், கொசப்பூா், மணலி, நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட்லைன், சடையான்குப்பம், புழல் மற்றும் வடபெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் கால்வாயின் இருபக்கமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனா்.
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications