அலர்ட் மக்களே! சென்னை, திருவள்ளூர் உட்பட 20 மாவட்டங்கள்.. அடுத்த 3 மணி நேரத்திற்கு கொட்ட போகுது மழை
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நல்ல மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கிய கோடைக் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்தாண்டு கோடை வெப்பம் உச்சத்தில் இருந்துள்ளது.. பல இடங்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டியது.

ஜூன் மாதம் முதல் இரண்டு வாரங்கள் வரையிலும் கூட வெப்பம் உச்சத்தில் இருந்தது. அதன் பின்னரே வெப்பம் படிப்படியாகக் கட்டுக்குள் வந்து மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
மழை: சென்னையைப் பொறுத்தவரைப் பல நாட்கள் வெயில் சதமடித்திருந்தது. மதிய நேரங்களில் பொதுமக்களால் வெளியே கூட செல்ல முடியாத ஒரு சூழலே நிலவி வந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதன் பின்னரே வெப்பம் குறைந்து சில் கிளைமேட் ஏற்பட்டது. நேற்று கூட சென்னையில் பல இடங்களில் நல்ல மழை பெய்திருந்தது.
அதீத வெயிலால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு இது சற்றே நிம்மதியைத் தருவதாக அமைந்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் பருவமழை தொடரும் என்பதால் மாநிலத்தில் பல இடங்களிலும் மழை தொடர்ச்சியாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. இதற்கிடையே திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எங்கெல்லாம் மழை: அதேபோல ராணிப்பேட்டை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் லேசான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் இருக்கும் மக்கள் வெளியே செல்லும் போது அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்வதே சிறப்பாக இருக்கும்.
முன்னதாக இன்று மதியம் வானிலை மையம் வெளியிட்ட தினசரி செய்திக்குறிப்பில், ""வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வானிலை மையம்: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 - 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 - 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு












Click it and Unblock the Notifications