அடுத்த 3 மணி நேரம்.. ! சென்னை உட்பட 28 மாவட்டங்களில் கொட்ட போகுது கனமழை.. மக்களே அலர்ட்டா இருங்க
சென்னை: நேற்றிரவு முதலே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்குச் சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு பருவமழையைக் காட்டிலும் வடகிழக்கு பருவமழை காலத்தில் நல்ல மழை பெய்யும் நிலையில், நீர்பிடிப்பு பகுதிகள் நிரம்பி வருகிறது.

அதிலும் நேற்றிரவு முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. மாலை தொடங்கிய மழை இரவில் வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கியது.
மழை: நேற்றிரவு தேங்கிய மழை நீரை அகற்றத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும், பொதுமக்களுக்கு உதவ உதவி எண்களும் அறிவிக்கப்பட்டன. இரவு முதலே பல்வேறு பல நூறு ஊழியர்கள் வெள்ள நீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர். நகரின் பல பகுதிகளில் மழை நீர் வடிந்துவிட்டதா சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இருப்பினும், சில பகுதிகளில் மழை நீர் இன்னுமே தேங்கியுள்ளதாகப் புகார்கள் வந்து கொண்டே இருக்கிறது.
இன்று காலை மழை சற்று குறைந்தது. இருப்பினும் ஓரிரு இடங்களில் தொடர்ந்து மழை பெய்தே வந்தது. மழை இல்லாததால் வெள்ள நீர் பல இடங்களில் வடிந்தது. இதற்கிடையே சென்னை உட்பட 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது அடுத்த 3 மணி நேரத்திற்குச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணி நேரம்: வேலூர், திருப்பத்தூர், கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம்: முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "நவ. 30ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யும்.
தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை டிச.1ஆம் தேதி : தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications