நெருங்கும் மிக்ஜாம் புயல்.. அலர்ட் மோடில் செம்பரம்பாக்கம் ஏரி.. 3,000 கன அடி நீர் திறக்க முடிவு!
சென்னை: புயல் முன்னெச்சரிக்கை மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, இன்று மாலை 5 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3,000 கன அடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு ஏற்பட்ட சென்னை வெள்ளத்தை எவராலும் மறந்திருக்க முடியாது. சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2015 ஆம் ஆண்டு திடீரென இரவு நேரத்தில் முன்னெச்சரிக்கை இன்றி நீர் திறக்கப்பட்டதால், கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் மக்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தனர். உயிரிழப்புகளும், உடைமை இழப்புகளும் ஏற்பட்டன.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் நவம்பர் 29ஆம் தேதி காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இரவு 7 மணி முதல் சென்னையின் பெரும்பாலான பகுதிகளிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை சுமார் 3 மணி நேரத்திற்கு கொட்டித் தீர்த்தது. சென்னையின் பல்வேறு பகுதியில் 15 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பதிவானது.
இதனால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர் வரத்து இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 22 அடியை கடந்து தண்ணீர் உள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து நீர் திறப்பு அவ்வப்போது அதிகரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த நவம்பர் 29ஆம் தேதி காலையில் விநாடிக்கு ஆயிரம் கன அடி திறக்கப்பட்ட நிலையில், மாலையில் 1,500 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. பின்னர், தொடர்ந்து நீர்வரத்து இரண்டு மடங்காக அதிகரித்ததன் காரணமாக நேற்று 4,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், இன்று செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு இன்று காலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 402 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 4,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று 402 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மழை, நீர் வரத்து குறைவு காரணமாக நீர்மட்டம் 22 அடிக்கும் கீழ் சென்றதால் நீர் திறப்பு குறைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் உபரி நீர் திறக்கும் அளவை அதிகரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் வட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை காரணமாக, இன்று மாலை 5 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3,000 கன அடி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்தால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரிக்கக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை விநாடிக்கு 3,000 கன அடியாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்பட்ட நீர் சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, திருநீர்மலை மற்றும் அனகாபுத்தூர் கால்வாய்கள் வழியாக அடையாறு ஆற்றில் கலக்கிறது. இதனால், சென்னை அடையாறு கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதனிடையே சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியில் இருந்து 2வது நாளாக 2000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. புழல் ஏரியில் நீர்இருப்பு 3006 மில்லியன் கனஅடியாக இருக்கிறது. நீர்வரத்து 985 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications