தீவிரமடையும் பருவமழை.. 7 மாவட்டங்களுக்கு அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்
சென்னை: அக்டோபர் மாதம் 1ம் தேதி தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஒன்றரை மாதங்கள் ஆகியும் கூட மழை போதுமான அளவில் பெய்யவில்லை. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கையில், "அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாலவூர், திருவாரூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் காலை 8 மணி வரை மழைக்கு வாய்ப்பு" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் மொத்த மழைப்பொழிவு விவரம்
அக்.1ம் தேதி தொடங்கி, திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக 477.0 மி.மீ மழை பெய்திருக்கிறது. சதவிகிதத்தின் அடிப்படையில் பார்த்தால், திருநெல்வேலி மற்றும் வேலூர் மாவட்டங்கள் இயல்பை விட முறையே +61% அதிகமாக மழையைப் பெற்றுள்ளன. நாகப்பட்டினம் மாவட்டம் இயல்பை விட -52% குறைவாக மழையைப் பெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் இயல்பை விட -52% குறைவாக மழையைப் பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் சராசரி மழை அளவு 257.9 மி.மீ ஆகப் பதிவாகியுள்ளது, இது இயல்பு மழையளவை (277.5 மி.மீ) விட -7% குறைவு ஆகும்.
அடுத்தடுத்த நாட்கள் எப்படி இருக்கும்?
இன்று தொடங்கி, இம்மாதம் இறுதி வரை வட கடலோர மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருந்தனர். அதேபோல இன்று காலை 9 மணியளவில் தனியார் வானிலை ஆய்வாளரான சென்னை வெதர்மேன் வெளியிட்டிருக்கும் பதிவில், "இலங்கை கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கிறது. இதன் காரணமாக புதுச்சேரி-நாகப்பட்டினம இடையே மழை பெய்து வருகிறது. நாளை வட தமிழகத்தில் மழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்திருந்தார்.
நேற்றைய தினத்தின் மழைப்பொழிவை பொறுத்தவரை,
திருச்செந்தூர் (தூத்துக்குடி) 8 செ.மீ,
ஊத்து (திருநெல்வேலி), ராதாபுரம் (திருநெல்வேலி), காயல்பட்டினம் (தூத்துக்குடி) தலா 7 செ.மீ,
நாலுமுக்கு (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி) தலா 6 செ.மீ,
மாஞ்சோலை (திருநெல்வேலி), பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி) தலா 5 செ.மீ,
திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி), சாத்தான்குளம் (தூத்துக்குடி) தலா 4 செ.மீ,
நம்பியாறு அணை (திருநெல்வேலி), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), திருநெல்வேலி AWS (திருநெல்வேலி) தலா 3 செ.மீ,
கன்னியாகுமரி (கன்னியாகுமரி), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), திருநெல்வேலி (திருநெல்வேலி), தூத்துக்குடி விமான நிலையம் ARG (தூத்துக்குடி), சின்கோனா (கோயம்புத்தூர்), கெத்தை (நீலகிரி), திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம் (திருப்பூர்) தலா 2 செ.மீ,
கொட்டாரம் (கன்னியாகுமரி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), கின்னக்கோரை (நீலகிரி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), மேல் பவானி (நீலகிரி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), திருப்பூர் PWD (திருப்பூர்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), பாளையம்கோட்டை (திருநெல்வேலி), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), நாங்குனேரி (திருநெல்வேலி), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), பல்லடம் (திருப்பூர்), தூத்துக்குடி ரயில் நிலையம் ARG (தூத்துக்குடி), எமரால்டு (நீலகிரி), ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி), nan (கன்னியாகுமரி), அழகரை எஸ்டேட் (நீலகிரி), பெரியாறு (தேனி), குன்னூர் PTO (நீலகிரி), குன்னூர் AWS (நீலகிரி), கன்னிமார் (கன்னியாகுமரி), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), திருப்பூர் தெற்கு (திருப்பூர்), ஊத்துக்குளி (திருப்பூர்) தலா 1 செ.மீ, என மழை பதிவாகியிருக்கிறது.
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications