கனமழை எதிரொலி! மொத்தம் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. எதுனு பாருங்க!
நெல்லை: நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், தேனி, நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வந்தது. நெல்லை மாநகர் பகுதிகளான சந்திப்பு, டவுன் பேட்டை, பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் புறநகர் பகுதிகளான மூன்றடைப்பு, நாங்குநேரி, களக்காடு, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. கால்வாய்கள் எல்லாம் குளம் போல் காட்சித் தருகின்றன. இன்றும் காலை முதலே நெல்லையில் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அது போல் கன்னியாகுமரி மாவட்டத்திலும், தென்காசி மாவட்டத்திலும், தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், விருதுநகர், நீலகிரி மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உயர் வகுப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேனியில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வெறும் 1 மணி நேரம்.. ஒட்டுமொத்த சிபிஎஸ்இ சிஸ்டமும் ஹேக்.. அம்பலப்படுத்திய 19 வயது இளைஞர் -
தென்மேற்கு பருவமழை தாமதமாவது ஏன்? புதிய தேதியை அறிவித்த வானிலை மையம்.. அதிகரிக்கும் எல் நினோ அச்சம்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
பிரான்சில் மட்டும் 7 பேர் பலி.. 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவை வாட்டும் அதீத வெயில்! -
சிதைந்துபோன மாணவர்கள் நம்பிக்கை.. CBSE விவகாரத்தில் குளறுபடிகள் என்ன? அதிர வைக்கும் ரிப்போர்ட் -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications