வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இனி மழையின் சம்பவம் தான்.. இந்த மாவட்டங்கள் தான் டார்கெட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. பருவமழை தொடங்கியதில் இருந்து அவ்வப்போது தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தான் மீண்டும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

a-deep-depression-is-likely-to-form-over-the-west-bengal-bay-in-the-next-24-hours-imd

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்த நிலையில் மேற்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் கூறுகையில், "வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

கனமழை பெய்யும் மாவட்டங்கள்

இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வட மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மேற்கு வங்கம், ஒடிசா கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் எப்படி இருக்கும்?

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்தால், தமிழகத்தின் கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தலைநகர் சென்னையை எடுத்துக் கொண்டால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

முன்னதாக இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது, வரும் 15, 16, 17 ஆம் தேதிகளில் சென்னை உள்பட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறி இருந்தது.

கனமழை பெய்யும் மாவட்டங்கள்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று, நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், பதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

15 முதல் 17 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்காலில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம். ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வரும் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வேசானது முதவ மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. என்று கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+