அரபிக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. 25ம் தேதி வங்கக்கடலில் சம்பவம் இருக்கு
சென்னை: அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மத்தியமேற்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24 முதல் 28 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மத்தியமேற்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு அரபிக்கடல், கர்நாடகா கடலோரப்பகுதிகள் மற்றும் மணிக்கு 25-45 கிலோ மீட்டர் வேகத்திலும் வீச வாய்ப்பு உள்ளது.
நாளை மறுநாள் மத்தியமேற்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
வங்ககடலை பொறுத்தவரை இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 24 முதல் 26 வரை மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே கேரளாவில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, இன்று அதிகாலை 05:30 மணிக்கு கர்நாடகா-கோவா கடற்கரைக்கு அப்பால் கிழக்கு-மத்திய அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது, இது லட்சத்தீவு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் வளிமண்டல சுழற்சியால் உருவாகி உள்ளது. இந்த சூறாவளி சுழற்சியானது சராசரி கடல் மட்டத்திலிருந்து 5.8 கிமீ வரை நீண்டிருக்கிறது. இது தென்மேற்கு நோக்கி சாய்ந்து நகர்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக வடக்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் ஆகஸ்ட் 24 ஆம் தேதியன்று வடக்கு வங்காள விரிகுடா மற்றும் சுற்றுப்புறங்களில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காரணங்களால் அடுத்த 5 நாட்களுக்கு கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் ஆகஸ்ட் 25ம் தேதி வரை கேரளா மற்றும் மாஹே ஆகிய இடங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை












Click it and Unblock the Notifications