வங்கக் கடலில் மாற்றம்.. அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்? தமிழகத்தில் கொட்ட துவங்கியது மழை
சென்னை: தமிழ்நாட்டில் கத்தரி வெயில் தொடங்கியது முதலே அதை தணிக்கும் விதமாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை உட்பட சில மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.. இந்நிலையில், கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதி மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது... கோவா - தெற்கு கொங்கன் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நேற்று ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.

இது வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 36 மணி நேரத்தில் வலுவடைய கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இது மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதால்., கேரளாவில் ஓரிரு நாட்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் சூழல் உள்ளது..
தென்மேற்கு பருவமழை
பிறகு படிப்படியாக தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பரவக்கூடும். மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 27-ம் தேதி உருவாகக்கூடும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில், வரும் 27ம் தேதி காற்றழுத்த தழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடல் - காற்றழுத்த பகுதி
மத்திய கிழக்கு அரபிக்கடலில், கோவா, தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால், நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த, 36 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில், வரும் 27ம் தேதி, புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று முதல் 28 வரை, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில், ஒரு சில இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், ஒரு சில இடங்களில், இன்று முதல், 26 வரையிலான காலத்தில், அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகலாம்.
புறநகர்களில் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக துாத்துக்குடியில், 101 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38.4 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதன்படியே, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தற்போது கூறியிருக்கிறது.. அடுத்த 10 நாட்களுக்கு தமிழகத்துக்கு நல்ல மழை உள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், இப்போதே மாநிலத்தில் ஆங்காங்கே குளிர்ச்சி தென்பட துவங்கியிருக்கிறது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications