சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்வாங்கிய அபார்ட்மென்ட்! அச்சத்தில் மக்கள்
சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அமைந்தகரையில் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உள்வாங்கியதால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழகத்திற்கு பலனைக் கொடுக்கும் வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கிவிட்டது. இதன் அறிகுறியாக தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இது நாளை சென்னை கடற்கரைக்கு அருகே நிலவக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் நேற்று இரவு முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இன்றும் நாளையும் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு நாளில் 150 மி.மீ. மழை பெய்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த மழை மேலும் தீவிரமடையும் என்றும் சொல்கிறார்கள். இதனால் மக்கள் இப்போதே காய்கறிகள், மளிகை சாமான்களை வாங்கி குவிக்கிறார்கள். அது போல் மருந்து, தண்ணீர் உள்ளிட்டவைகளையும் வாங்கி வருகிறார்கள்.
இன்று காலை முதலே சென்னையை மிக கனமழை பதம் பார்த்து வருகிறது. இதனால் அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு திடீரென உள்வாங்கியது. 200-க்கும் மேற்பட்டோர் வசிக்கும் இந்த குடியிருப்பின் ஒரு பகுதி திடீரென உள்வாங்கியதுடன், சுவர்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து சுவர்களுக்கு அருகே இருக்கும் பொருட்களை குடியிருப்புவாசிகள் அகற்றி வருகிறார்கள். இது குறித்து குடியிருப்புவாசிகள் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: சுமார் 150 மீட்டர் தூரத்திற்கு 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்டோர் குடியிருக்கிறார்கள்.
பக்கத்தில் ஒரு உணவகம் கட்டப்பட்டு வருகிறது. அந்த உணவக கட்டுமானத்தில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இன்று காலை 11 மணிக்கு இப்படி ஏற்பட்டது. நாங்கள் 20 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.
இதுவரை இது போன்ற பிரச்சினை இல்லை. தற்போது மண் அரிப்பு ஏற்பட்டு சுவர்களில் விரிசல் விடுவது நடைபெறுகிறது. இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர்கள் நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications