Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொண்டாடுங்க.. இந்த வருஷம் மழை கொட்டோ கொட்டுனு கொட்டும்! எல் நினோ இல்லை! ஐஎம்டி சொன்ன குட் நியூஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் வழக்கத்தை விட அதிகமாகவே பொழியும் எனவும், இந்த ஆண்டு எல் நினோ இல்லை என்பதால் பருவமழை பயிர் சாகுபடிக்கு உதவிகரமாக இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்தியா முழுவதும் பிப்ரவரி மாதத்தில் இருந்து கடுமையான வெயில் கொளுத்தி வந்தது. குறிப்பாக வடமாநிலங்களில் வழக்கத்தை விட வெயிலின் அளவு அதிகமான பதிவாகியது. இதனால் மக்கள் மிகுந்த அவதி அடைந்தனர். பகல் நேரங்களில் கடும் வெயில் கொளுத்துவதால் மக்கள் வெளியே வரவே அஞ்சினர். பல நகரங்களில் வெயில் காரணமாக ரெட் அலர்ட் விலக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பொதுமக்களின் இன்னலை போக்கும் வகையில் கடந்த சில தினங்களாகவே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பருவமழை தொடங்கியிருக்கிறது.

weather IMD El Nino

வழக்கத்தை விட முன்னதாகவே கேரளாவில் பருவ மழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் வழக்கத்தை விட அதிகமாகவே பெய்யும் எனக் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில், இந்தியாவில் நீண்ட காலமாகவே தென்மேற்கு பருவமழை சராசரியாக 86.5 சென்டிமீட்டர் என்று அளவிலேயே இருக்கும் நிலையில் இந்த ஆண்டு அதைவிட ஆறு சதவீதம் அதாவது சுமார் 92 சென்டிமீட்டர் மழை பெய்யும் என கணித்துள்ளது.

வடகிழக்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களைத் தவிர இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அதிக மழை பெய்யும் எனவும், ஜூன் மாதத்திலேயே நாடு முழுவதும் சராசரியை விட எட்டு சதவீதம் அதிக பருவ மழை பெய்யும் என அறிவித்திருக்கிறது. இந்த ஆண்டு பருவமழை கடந்த மே 24ஆம் தேதி வழக்கத்தை விட ஒரு வாரத்திற்கு முன்னதாகவே கேரளாவில் தொடங்கியது. இது கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு முன்பே தொடங்கி இருக்கிறது, மும்பையில் 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் மே 26 ஆம் தேதியே பருவமழை தொடங்கியது. இது வழக்கமான தேதியை விட இரண்டு வாரம் முன்பாகவே தொடங்கி இருக்கிறது

மும்பை மட்டுமல்லாது கர்நாடகா, கோவா, மத்திய மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளிலும் வழக்கத்தை விட பருவமழை வேகமாக பெய்து வருகிறது. இந்த ஆண்டு பருவ மழை முன்னதாகவே தொடங்கியதற்கும் அதிக மழைப்பொழிவு தருவதற்கும் எல் நினோ இல்லை என்பதே காரணம் என்கிறது ஐஎம்டி. பசிபிக் பெருங்கடலில் வெப்பம் அதிகரிக்கும்போது இந்தியா போன்ற நாடுகளில் எழில் நினோ தாக்கம் காரணமாக மழை பொழிவு குறையும். தற்போது எல் நினோ இல்லை என்பதால் மழைக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கிறது.

ஐஎம்டி கணிப்பு சரியாக இருந்தால் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக அதிக மழைப்பொழிவு இருக்கும் பருவமழை காலமாக இது இருக்கும். கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை அதற்கு முந்தை ஆண்டுகளை விட சராசரியாக 8 சதவீதம் அதிக மழைப்பொழிவு இருந்தது. இது போன்ற தென்மேற்கு பருவமழை விவசாயத்திற்கு மிகுந்த பலன் அளிப்பதாக இருக்கும். காரீஃப் பயிர்கள் சாகுபடிக்கு தேவையான நீர் கிடைக்கும். அதே நேரத்தில் ஒரு சில பகுதிகளில் கடுமையான மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளதால் அந்தந்த மாநில அரசுகள் முன்கூட்டியே தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+