வங்க கடல், அரபிக்கடலில் மாற்றம்..உருவானது வளி சுழற்சி..இன்னும் 2 நாளைக்கு வெடிச்சு கொட்டப்போகுது மழை
சென்னை: குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் தனித்தனி வளி மண்டல சுழற்சிகள் நிலவுவதால், தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், இன்று காலை 10 மணி வரை நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவமழை கொட்டுவது வாடிக்கையாகும். அந்தவகையில் இப்போதும் பருவமழை தீவிரமடைந்து வருகிறது.. கடந்த சில தினங்களாகவே நல்ல மழை மாநிலத்தில் பெய்து வருகிறது.

ராமேஸ்வரம்: நேற்றுகூட ராமேஸ்வரத்தில் 34 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது.. இதற்கு காரணம், சூப்பர் மேக வெடிப்பு நிகழ்வு என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.. இப்படிப்பட்ட சூழலில், இன்றும், நாளையும் மழை நீடிக்கும் என்கிறது வானிலை ஆய்வு மையம்.. இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் உள்ளதாவது:
"தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம், நாலுமுக்கு பகுதியில் அதிகபட்சமாக 17 செ.மீ., மழை பதிவானது.
மழைப்பொழிவு: இதற்கு அடுத்தபடியாக, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, மயிலாடுதுறை மாவட்டம் கோடியக்கரை பகுதிகளில் தலா 15; திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி 14; நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி 13 மற்றும் திருக்குவளையில் 11 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரள கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது.
குமரிக்கடல்: தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இன்று உருவாகும் வளி மண்டல சுழற்சி, ஓரிரு நாட்களில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும்.
இப்பின்னணியில், தமிழகத்தின் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் கன மழை பெய்யும். தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வரும் 24 வரை, மணிக்கு 35 முதல் 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே மணிக்கு 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதனால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
வங்கக்கடல்: வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, படிப்படியாக வலுவடைய வாய்ப்புள்ளதால், ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்பும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே, நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. மூன்று நாட்களாக நீடித்த மழையால், சாலைகளில் கடல்நீர் போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது... கடல் பகுதி சீற்றத்துடன் காணப்பட்டதால், வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் கிராமத்தில் கடலோரப் பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களுக்குள் கடல் நீர் புகுந்தது. அங்கு 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications