தொடர் கனமழை.. நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை: தொடர் மழை காரணமாக நாளை 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னை பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகங்களில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், திருவண்னாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நீர் நிலைகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்து முழு கொள்ளளவை நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மழை நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. குறிப்பாக விழுப்புரம் மற்றும் கடலூரில் பெய்த அதி கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேலூர், தருமபுரி, ராணிப்பேட்டை , திருப்பத்தூர், சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகங்களில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொடர் கனமழை மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருவதன் காரணமாக நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கனமழை எதிரொலியால், அண்ணாமலை பல்ககலைக்கழக உறுப்பு கல்லூரிகளிலும் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூரில் உள்ள திருவள்ளூர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகளுக்கும் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications